- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்புதிதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால் இதை செய்யாமல் தோசை வார்க்காதீர்கள்! இரும்பு தோசைக்கல் உடனே பழக...

புதிதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால் இதை செய்யாமல் தோசை வார்க்காதீர்கள்! இரும்பு தோசைக்கல் உடனே பழக என்ன செய்ய வேண்டும்?

- Advertisement -

புதிதாக இரும்பு தோசைக்கல் வாங்கினாலும், பழைய தோசை கல்லில் தோசை சுட வேண்டும் என்றாலும், பெரிய விஷயமாக இருக்கும். அதில் கண்டிப்பாக தோசையை சுலபமாக சுடவே முடியாது, ஒட்டிக் கொண்டு விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பழகாத இந்த தோசை கல்லில் தோசை வார்த்து மாவை வீணாக்குபவர்கள், இப்படி செஞ்சு பாருங்க, இனி ரொம்ப சுலபமாக மொறு மொறு என்று கிரிஸ்பியாக மெல்லிதாக நீங்களும் இதே கல்லில் தோசை வார்க்கலாம். அது எப்படி? என்று இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தோசைக்கல் பழக வேண்டும் என்றால் முதலில் புதிய தோசைக்கல் வாங்கியவுடன் அதில் தோசை வார்க்கக் கூடாது. தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு இரண்டு முறை நன்கு கழுவி கொள்ளுங்கள். இரும்பு நார் போட்டு கீறல் விழும் அளவிற்கு கழுவ கூடாது. கழுவியதும் தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் பற்ற வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எல்லாம் வற்றியதும், பின் தேங்காய் எண்ணெய் சேர்த்து எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும். இதற்கு ஒரு கத்தியில் சின்ன வெங்காயத்தை பாதி அளவுக்கு உரித்து, வெட்டி சொருகி கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

வெங்காயத்தை வைத்து தேங்காய் எண்ணெயை எல்லா புறமும் படும்படி நன்கு அழுத்தம் கொடுத்து பரப்பி விடுங்கள். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதில் முதல் தோசையை வார்த்து பாருங்கள், அழகாக வரும் ஆனால் இதை நீங்கள் சாப்பிடக்கூடாது. அதே போல அடுத்த தோசையையும் வார்த்து எடுத்து குப்பையில் போட்டு விடுங்கள். பின்னர் மூன்றாவது தோசையிலிருந்து நீங்கள் சுட்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்.

ஒரு தோசை சுட்டு முடித்ததும், லேசாக எண்ணெய் தெளித்து வெங்காயத்தை வைத்து கல்லை துடைக்க வேண்டும். சிலர் வெங்காயத்திற்கு பதிலாக கத்திரிக்காயையும் பாதியாக வெட்டி பயன்படுத்துகிறார்கள். நீங்களும் அதே போல ட்ரை பண்ணி பார்க்கலாம். பின்னர் அடுத்த தோசையை அழகாக மெலிதாக சுட்டு எடுக்க மொறுமொறுன்னு சுட்டு சாப்பிட செமையாக இருக்கும்.

- Advertisement -

புதிய தோசைக்கல் மட்டுமல்ல, பழைய தோசைக் கல்லையும் இதே முறையில் தான் நாம் மீண்டும் பயன்படுத்தும் பொழுது செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பயன்படுத்தாத இரும்பு தோசை கல்லை இரண்டு முறை நன்கு கழுவிய பிறகு இதே போல தேங்காய் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை வெட்டி நன்கு தடவி துடைத்து விடவேண்டும். அதன் பிறகு இரண்டு தோசை வார்த்து மூன்றாவது தோசையை நாம் சரியாக சுட்டு சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் கொசு, கரப்பானின் தொல்லை அதிகம் உள்ளதா? இப்படி செய்து பாருங்கள் ஒன்று மிச்சம் இல்லாமல் எல்லாமே வெளியேறும்.

பிறகு தோசை எல்லாம் சுட்டு சாப்பிட்ட உடன், தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு கழுவ கூடாது. லேசாக எண்ணெய் தெளித்து டிஷ்யூ அல்லது துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். அப்படியே எடுத்து ஆணியில் மாற்றி விடுங்கள். மீண்டும் பயன்படுத்தும் பொழுது சோப்பு அதிகம் சேர்க்காமல், கையிலேயே லேசாக சோப்பு தண்ணீரால் கழுவி விட்டு, அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து தோசை வார்க்கலாம். இப்படி செய்யும் பொழுது, நீண்ட நாட்கள் இரும்பு தோசைக்கல் புதிதாகவே நன்கு மொறுமொறுன்னு தோசை வார்ப்பதற்கு பயன்படும்.

சற்று முன்