உங்கள் வீட்டில் கொசு, கரப்பானின் தொல்லை அதிகம் உள்ளதா? இப்படி செய்து பாருங்கள் ஒன்று மிச்சம் இல்லாமல் எல்லாமே வெளியேறும்.

kosu viratti
- Advertisement -

இன்று நாம் நம்முடைய வீட்டிற்கு தேவையான மூன்று பயனுள்ள வீட்டு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் அனைத்துமே பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாகவும், அதிகம் செலவில்லாத குறிப்புகளாக உள்ளன. இல்லத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு இந்த வீட்டு குறிப்புகள் அனைத்தும் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

குறிப்பு – 1:
வீட்டில் கொசு தொல்லைகள் அதிகமாக இருந்தால் ரசாயன கொசு விரட்டிகளை பயன்படுத்தாமல் நம் வீட்டில் இருக்கின்ற வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தியே கொசுக்களை சுலபமாக விரட்டலாம்.

- Advertisement -

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு வேப்பெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள். 2 அல்லது 3 பூண்டு பற்களை தோலுடன் நன்கு இடித்து, அந்த வேப்பெண்ணெயில் போட்டு நன்கு கலந்து, பிழிந்து சிறிது நேரம் ஊற விடுங்கள், பிறகு அந்த பூண்டு பற்களை அப்புறப்படுத்தி விட்டு, பூண்டு சாறு ஊறிய வேப்பெண்ணையை மட்டும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு நடுத்தரமான அளவில் இருக்கின்ற வெங்காயத்தை எடுத்து தோலுரித்து, அதில் தீபத்தில் உள்ளது போன்ற ஒரு குழியை தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த வெங்காயத்தில் பூண்டுச்சாறு கலந்த வேப்பெண்ணையை ஊற்றி, திரி போட்டு கொசுத்தொல்லை அதிகமாக இருக்கின்ற இடங்களில் இந்த வெங்காய தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். வெங்காயத்தில் இருக்கின்ற வேப்பெண்ணை மற்றும் பூண்டு சாற்றின் வாசனை மற்றும் வெங்காயத்தில் இருக்கின்ற வாசனை ஆகிய மூன்றும் சேர்ந்து, காற்றில் பரவி கொசுக்களை அந்த இடத்திலிருந்து அடியோடு விரட்டி விடும்.

- Advertisement -

குறிப்பு – 2:
சில பேர் வீடுகளில் குருமா குழம்பு, சுண்டல் போன்ற உணவு வகைகள் செய்ய வெள்ளை கொண்டை கடலையை தண்ணீரில் ஊற வைப்பார்கள். பொதுவாக 7 – 8 மணி நேரம் இந்த வெள்ளை கொண்டை கடலைகளை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் மட்டுமே, அது சமையலுக்கு ஏதுவானதாக இருக்கும்.

சமயங்களில் சிலர் இந்த வெள்ளை கொண்டை கடலைகளை ஊற வைக்க மறந்து விடுவார்கள். அது போன்ற சமயத்தில், 1 மணி நேரத்திலேயே வெள்ளை கடலைகள் நன்கு ஊறின பதத்தில் நமக்கு கிடைக்க, ஒரு ஹாட் பாக்சை எடுத்து, அதில் நீங்கள் சமைக்க பயன்படுத்த போகின்ற வெள்ளை கடலைகளை போட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த வெள்ளைக்கடலை இருக்கின்ற ஹாட் பாக்சில் நன்கு கொதிக்கின்ற தண்ணீரை கடலைகள் மூழ்கும் அளவிற்கு ஊற்றி, ஆட்பாக்ஸை நன்கு இறுக்கமாக மூடி, ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து அந்த ஹாட் பாக்ஸை திறந்தால், வெள்ளை கொண்டை கடலைகள் அனைத்தும் 8 மணி நேரம் ஊறிய பதத்தில் நமக்கு கிடைக்கும்.

குறிப்பு – 3:
நம் எல்லோருடைய வீடுகளிலும் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது கரப்பான் பூச்சிகள் தான். குறிப்பாக சமையல் அறைகளில் இந்த கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். இதைப் போக்க ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறை பிழிந்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு டெட்டால் திரவத்தை ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, இந்த திரவத்தை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெயில் காலத்துக்கு ஏற்ற அட்டகாசமான ஸ்மார்ட் ஐடியா

பிறகு இந்த திரவத்தை ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் அடைத்து, நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக உங்கள் சமையலறையில் அடுப்பு, சமையலறை சிங் போன்ற கரப்பான் பூச்சிகள் அதிகம் வருகின்ற இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும். இந்த திரவத்திலிருந்து வெளிப்படும் வாசனையால் கரப்பாம்பூச்சி உட்பட வேறு எந்த வகையான பூச்சிகளும் சமையலறைக்குள் வராமல் தடுக்கும்.

 

- Advertisement -