தோசைக்கல்லை அதிகம் தீய விட்டு விட்டீர்களா? போச்சு போங்க தோசையே இனி ஒழுங்கா வராது! 2 நிமிடத்தில் எப்படி மீண்டும் மொறுமொறு தோசை அந்த கல்லில் சமைப்பது?

dosai-kal
- Advertisement -

தோசை தவாக்கள் எத்தனை வாங்கினாலும் தோசை கல்லை போல வருவது இல்லை. அதிக விலை கொடுத்து தோசை தவாக்கள் பிராண்டட்டாக வாங்கினாலும், சில மாதங்களிலேயே அது பயனற்றதாக மாறிவிடுகிறது. இதற்காக செலவு செய்வது வீண் தான் என்று தெரிந்தவர்கள், தோசை கல்லை வாங்கி வைத்து விடுகிறார்கள். தோசை கல்லை முதன் முதலில் பழக்குவது எப்படி? அதே போல தோசை கல்லை தீய விட்டு விட்டால் எப்படி உடனடியாக மறுபடியும் தோசை சுடுவது? என்பது போன்ற குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தவாக்கள் பெரும்பாலும் பிராண்டட்டாக வாங்கா விட்டால் வெகுவிரைவாகவே அதில் இருக்கும் கோட்டிங் உரிந்து வந்துவிடும். இது வயிற்றுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லும் பொழுது கேன்சருக்கும் வழி வகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள் எனவே தோசை தவாக்களை தூக்கி எறிந்து விட்டு இரும்பு தோசை கல்லை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

- Advertisement -

பழங்கால முறைப்படி இரும்பு தோசை கல்லில் சமைப்பதாக இருந்தால் முதல் முறையாக நீங்கள் தோசை சுடும் பொழுது கண்டிப்பாக தோசை வராது. இதனால் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி ஒருநாள் முழுவதும் ஊற விட்டு விடுங்கள். 24 மணி நேரம் கஞ்சி தண்ணீரில் ஊறிய பிறகு நீங்கள் பாதி வெட்டிய கத்தரிக்காய் அல்லது வெங்காயத்தை எண்ணெயில் தொட்டு நன்கு தேய்த்துக் கொடுங்கள். அதன் பிறகு தோசை வார்த்தால் தோசை மெல்லியதாக முறுவலாக வரும்.

தென்னிந்தியா முழுவதும் விரும்பி சாப்பிடும் காலை உணவு தோசை! இந்த தோசையை கல்லில் சமைக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து சமைக்க வேண்டும். அதிக தீயும், குறைந்த தீயும் சரியான முறையில் வேலை செய்யாது. மேலும் அலட்சியமாக தெரியாமல் தோசை கல்லை அப்படியே அடுப்பில் வைத்து விட்டு சென்று விட்டால், தோசை கல் தீய ஆரம்பித்து விடும். அதன் பிறகு நீங்கள் தோசை வார்த்தால் கண்டிப்பாக ஒழுங்காக வராது, ஒட்டிக் கொண்டு விடும். இதற்காக தோசை கல்லுடன் இனி சண்டை போட வேண்டாம்.

- Advertisement -

கொஞ்சம் தண்ணீரை எடுத்து தோசை கல்லின் மீது தெளியுங்கள். தெளிக்கும் பொழுதே ஒட்டிக் கொண்டிருக்கும் கறி மற்றும் எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் உருண்டு நீர்க்குமிழிகள் ஆக மாறும். இந்த நீர்க் குமிழிகளை உடனடியாக சூட்டுடன் சூடாக கரண்டியை வைத்து வெளியில் தள்ளி விட்டு விடுங்கள். இதனால் கறி பிடித்தது நீருடன் வெளியேறிவிடும். எப்பொழுதும் தோசை கல்லை கரண்டியை கொண்டு கீறல் விழும் படி சேதப்படுத்தக் கூடாது.

பிறகு பாதி அளவிற்கு வெட்டிய வெங்காயத்தை எண்ணெயில் முக்கி தோசை கல்லின் மீது தடவுங்கள். பின் மிதமான தீயில் மீண்டும் தோசை வார்த்து பாருங்கள், தோசை கொஞ்சம் கூட ஒட்டாமல் பழையபடி முறுவலாக மொறுமொறுவென்று சூப்பராக எடுக்க வரும். இது தெரியாமல் நீங்கள் தோசை கல்லை சேதப்படுத்தினால் தோசையும் வராது, கல்லும் வீணாகிவிடும். தோசைக்கல் பயன்படுத்துபவர்கள் அதனை அடிக்கடி சோப் போட்டு கழுவிக் கொள்ளலாம் ஆனால் ஸ்கிரப்பர் பயன்படுத்தக் கூடாது. ஸ்க்ரப்பர் பயன்படுத்த பயன்படுத்த தோசை மெல்லியதாக வார்க்க முடியாமல் போகும். பஞ்சு போல இருக்கும் ஸ்கிரப்பரை பயன்படுத்தி தோசை கல்லை சுத்தம் செய்யலாம். பயன்படுத்தும் முன்பும், பின்பும் கண்டிப்பாக எண்ணெய் தடவி வையுங்கள், நீண்ட காலம் உழைக்கும்.

- Advertisement -