தோசைக்கல்லை சுத்தம் செய்ய இப்படி ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாளா தெரியாமல் போயிருச்சே! சோடா உப்பும் வேண்டாம். வினிகரும் வேண்டாம்.

dosai-kal
- Advertisement -

நம்முடைய வீட்டில் தோசை சுட பயன்படுத்தும் இரும்பு தோசை கல்லை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால், அந்தக் கல்லில் ஓரப்பகுதிகள் முழுவதும் அதிகப்படியான பிசுபிசு போடு, கரி பிடித்து, சொறசொறவென்று மாறி இருக்கும். இதனால் தோசைக்கல் முழுவதும் நம்மால் தோசையை வார்த்து தேக்க முடியாது. தோசை ஒட்டிக்கொள்ளும். நிறைய பேர் இப்படி கரி பிடித்த தோசைக்கல்லை வினிகர், சோடா உப்பு இப்படிப்பட்ட பொருட்களை சேர்த்து தான் சுத்தம் செய்வார்கள். இன்றைக்கு நாம், இந்த இரண்டு பொருட்கள் சேர்க்காமல், புதுவிதமாக சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

dosai-kal2

உங்கள் வீட்டில் இருக்கும் இரும்பு தோசைக்கல்லை முதலில் அடுப்பின் மேலே வைத்து, அடுப்பை பற்ற வைத்து விடவேண்டும். அடுப்பை முழுமையான ஃபுல் ஃபிலேமில் வைத்து, தோசைக்கல் சூடான பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு கல் உப்பை போட்டுக்கொள்ளுங்கள். அந்த கல்உப்பை தோசைக்கல் முழுவதும் படும்படி பரப்பி நன்றாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு ஃபோர்க் ஸ்பூன் அல்லது கத்தி எதில் வேண்டும் என்றாலும், தோல் பக்கத்தில் சொருகி கொள்ளுங்கள். அதன்பின்பு, தோசைக்கல்லில் போட்டிருக்கும் கல்லுபின் மேலே, எலுமிச்சம் பழத்தை வைத்து நன்றாக தேய்த்துவிட வேண்டும். குறிப்பாக தோசைக்கல்லில், ஓரங்களில் தான் அதிகப்படியான கருப்பு நிற கரிகள் பிடித்திருக்கும். அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். கல் உப்பை வைத்து கறகறவென தேய்த்து எடுத்தால், தோசைக்கல்லில் இருக்கும் பிசுக்கு அனைத்தும் சுலபமாக வெளியேறிவிடும்.

dosai-kal3

அடுத்தபடியாக மீதமிருக்கும் 1/2 மூடி எலுமிச்சம் பழத்தின் ஜூஸை தோசைக்கல்லில் பிழிந்து, உப்போடு சேர்த்து மீண்டும் நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். அடுப்பை அணைத்து விடக்கூடாது. கை சூடு பொறுக்க வில்லை என்றால் அடுப்பை கொஞ்சம் மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தோசைக்கல் சூட்டில், கல் உப்பு, எலுமிச்சை பழச்சாறு, இவை இரண்டும் நன்றாக சேர்ந்து ஊறி இருப்பதால், அந்த பிசுபிசுப்போடு சேர்ந்த கரி அழுக்கு, சுலபமாக நீங்கும். தோசை கரண்டியை எடுத்து தோசை கல்லில் சொறசொறவென்று தேய்த்து ஓரத்தில் இருக்கும் பிசுக்குகளை சுரண்டி எடுக்க வேண்டும். கருப்பு நிறத்தில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பு, தோசை கல்லிலை சுரண்டும் போது வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

dosai-kal4

இப்போது உங்களது தோசைக்கல் முக்கால் பாகம் சுத்தமாகியிருக்கும். நீங்கள் போட்ட வெள்ளை உப்பு, கருப்பு நிற உப்பாக மாறி இருக்கும். சுரண்டி வைத்திருக்கும் கரியோடு இந்த உப்போடு, சேர்த்து ஒரு துண்டை வைத்து, துடைத்து கீழே தள்ளி விடுங்கள். தோசைக்கல் 80% சதவிகிதம் இப்போது சுத்தமாகாகி இருக்கும். ஆனால் ரொம்பவும் வறண்டு போய் இருக்கும்.

- Advertisement -

dosai-kal5

அடுத்தபடியாக தோசைக்கல்லில் 2 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி, 2 ஸ்பூன் உப்பைப் போட்டு, 2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி, இதேபோல் ஃபோர்க்கில், பாதி எலுமிச்சம் பழத்தை குத்தி மீண்டும் நன்றாக தோசைக்கல் முழுவதும் தேய்த்து விட வேண்டும்.

dosai-kal1

இரண்டு நிமிடங்கள் வரை தேய்த்தால் மிச்சம் மீதி ஓரங்களில் பிசுக்கு இருந்தால், தோசை கரண்டி எடுத்து, சுரண்டி சுத்தம் செய்து கொள்ளுங்கள். மீண்டும் தோசைக்கல்லில் இருக்கும் கழிவுகளை சுத்தமாக ஒரு துண்டை கொண்டு துடைத்து கீழே தள்ளி விடுங்கள்.

dosai

இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு வெங்காயத்தை எடுத்து இரண்டாக வெட்டிக் கொண்டு, நன்றாக சூடான தோசைக்கல்லில் தேய்க்க வேண்டும். அதன் பின்பு தோசைக்கல் முழுமையாக தயாராகி இருக்கும். உடனடியாக தோசை ஊற்றினாலும், தோசை ஒட்டாமல் சூப்பராக வரும். தோசைகளும் சூப்பராக சுத்தமாகி இருக்கும். உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் இருக்கும் இந்த 4 பொருட்களை சேர்த்து முடிச்சுப் போட்டு, நில வாசப்படியில் கட்டித் தொங்கவிட்டால் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலும், அங்கேயே எரிந்து பொசுக்கிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -