சமையலறையில் இருக்கும் இந்த 4 பொருட்களை சேர்த்து முடிச்சுப் போட்டு, நில வாசப்படியில் கட்டித் தொங்கவிட்டால் எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலும், அங்கேயே எரிந்து பொசுக்கிவிடும்.

எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் நெருங்க விடாமல் இருப்பதற்கு ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக நிறைய பரிகார முறைகள் உள்ளது. இருப்பினும் மிகவும் எளிமையாக எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்வதன்மூலம் எதிரிகளிடம் இருந்து வரக்கூடிய தொல்லைகளில் இருந்துகூட தப்பித்துக் கொள்ளலாம். காத்து கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், போன்ற எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் வாசற்படியை தாண்டி வீட்டுக்குள் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. முக்கியமாக வயிற்றெரிச்சலோடு, கண் திருஷ்டியை வைத்துக்கொண்டு, கெட்ட எண்ணத்தோடு வீட்டிற்குள் நுழைபவர்களின் கெட்ட எண்ணங்களும், நில வாசப்படியிலேயே பொசுங்கிப் போய்விடும்.

kettasathi-1

உங்கள் சமையலறையில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த 4 பொருட்களை தனித்தனியாக கையில் எடுத்து திஷ்டி கழித்தால் கூட, ஒரு நிமிடத்தில் உடம்பில் இருக்கும் கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றலும் விலகி வெளியே போய்விடும்.

அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பொருட்களை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். கல்லுப்பு, கடுகு, மிளகு, வர மிளகாய். முதலில் சதுர வடிவில் ஒரு சிறிய கருப்பு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முதலில் கடுகு 1 ஸ்பூன் அளவு, கல் உப்பு 1 ஸ்பூன் அளவு, மிளகு 7, வர மிளகாய் 3, காம்பு உடையாமல் நுணி உடையாமல் இருக்க வேண்டும். இந்த 4 பொருட்களையும் வைத்து ஒரு நீல வண்ண நூலால் கட்டி, மூன்று முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

Kadugu

இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து, வெள்ளிக்கிழமை தினமான இன்று மாலை 6 மணிக்கு உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டி, உங்கள் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழையவே கூடாது என்ற வேண்டுதலை வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு ‘ஓம் பராசக்தி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரத்தை உச்சரிக்கும் போது அந்த முடிச்சை உங்கள் உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, உச்சரியுங்கள். அப்போது பராசக்தி தேவி அந்த முடிச்சில் வந்து அமர்ந்து உங்களது வீட்டை பாதுகாப்பாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. இந்த முடிச்சை உங்கள் நில வாசற்படிக்கு உள்பக்கம் ஒரு ஆணியில் மாட்டி விட வேண்டும்.

எப்போதுமே வாசல் காலில் ஆணி அடிக்க கூடாது. அதாவது வாசல்கால் மரத்தில் ஆணி அடிக்க கூடாது. நில வாசப்படிக்கு உள்பக்கம், மேல் பகுதியில், சுவர் இருக்கும் பகுதியில் சிறிய ஆணியை அடித்து, இந்த முடிச்சை மாட்டி விட்டு விடலாம். வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் வீட்டில் சாதாரணமாக பூஜை செய்யும்போது, ஊதுவத்தி தூபத்தை இந்த முடிசுக்கும் காட்டி வழிபட்டு கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சை மாற்றினால் கூட போதும். பழைய பொருட்களை கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிடலாம்.

vasal-kathavu

கெட்டதை கொடுக்கக் கூடிய சக்தி வென்கடுகுக்கு உண்டு. அதே போல் நாம் சமையலறையில் பயன்படுத்தும் இந்த கருப்பு கடுகிற்க்கும் கெட்ட சக்தியை எதிர்க்கக் கூடிய தன்மை உண்டு. வீட்டில் யாருக்கேனும் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதாவது திடீர் சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சிறிது கடுகு, 3 காய்ந்த மிளகாய் சேர்த்து அந்த நபரின் தலையை மூன்று முறை சுற்றி எரியும் நெருப்பில், இந்த மூன்று பொருட்களையும் போட்டு விட வேண்டும்.

amman

அப்படி செய்யும் பட்சத்தில் கண் திருஷ்டி கோளாறுகள் அல்லது ரோட்டில் தவறுதலாக ஏதாவது திருஷ்டி சுத்தி போட்டதை மிதித்துவிட்டால் ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்களை நீக்குவதற்கு இது ஒரு சுலபமான வழி. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது. நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த ஒரு பலனும் நம்மை வந்து சேராது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அடுத்த வருடமே சொந்த வீடு வாங்க உங்களுக்கும் ஆசையா? புதிய செங்கல் வாங்கி இப்படி வழிபாடு செய்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.