நவகிரகங்களினால் வரக்கூடிய பெரிய பெரிய கஷ்டங்கள் கூட ஒரு நொடிப் பொழுதில் கரைந்து போக, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ, வாரம் 1 முறை இதை சாப்பிட்டாலே போதும்.

navagraha

நமக்கு மலை போல் வரக்கூடிய கஷ்டங்கள் கூட, பனிபோல் உருகி விடும். காலம் நமக்கு கொடுக்கும் பெரிய பெரிய கஷ்டங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள, ஒரு சக்திவாய்ந்த எளிமையான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் வாழ்க்கையில் தீர்க்க முடியாத சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஆனால், அந்த சிக்கல்களை அவிழ்க்கும் சூட்சமமான முறையை கண்டறிய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு, ஒரு அற்புதமான பதிவு இது. இந்த பூலோகம் இயங்கிக் கொண்டிருப்பதே நவகிரகங்களினால் தான். நம்முடைய உடல் இயங்கிக் கொண்டிருப்பதும் நவகிரகங்களினால் தான்.

navagragam

நமக்கு நன்மை கொடுப்பதும் இந்த கிரகங்கள் தான். நமக்கு தீமையை கொடுப்பதும் இந்த கிரகங்கள் தான். இந்த கிரகங்களை சாந்தி செய்து விட்டாலே போதும். வாழ்வில் வெற்றியை பெற்று விடலாம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்கள் காணாமல் போக, நவகிரகங்களுக்கு உரிய இந்த நவதானியத்தை நம் வீட்டில் எப்போதுமே வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

நவதானியம் நம்முடைய வீட்டில் இருந்தாலே, நம்முடைய வீட்டிற்கு தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. வாரம் ஒருமுறை, நவ தானியம் சேர்த்த உணவை உங்களுடைய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நவதானியம் என்பது ஒன்பது வகையான தானியங்களை குறிக்கும். இந்த ஒன்பது வகை தானியங்களை சுண்டல் செய்து சாப்பிட்டாலும் சரி, ஊறவைத்து அரைத்து தோசையாக வார்த்து சாப்பிட்டாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம்.

navadhanyam

வாரம் ஒரு முறை இந்த நவ தானியம் சேர்த்த உணவை உட்கொள்ளும்போது நவகிரகத்தினால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்கும். ஆரோக்கிய ரீதியாக உங்கள் உடல் உபாதைகளும் தீரும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கஷ்டங்கள் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தால் அதுவே பெரிய வரம் தானே!

அடுத்தபடியாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று இந்த நவ தானியங்களை தண்ணீரில் ஊற வைத்து, அந்த தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் காக்கை குருவிகளுக்கு சாப்பிட போடலாம். அதுவும் இல்லை என்றால் ஏதாவது ஒரு நீர்நிலைகளில் நவதானியத்தை கொண்டு போய் கொட்டி வருவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

navadhanya-dosai

இதோடு சேர்த்து வாரம் ஒருமுறை உங்களுடைய வீட்டின் குடும்பத் தலைவியின் கையால் ஏதாவது ஒரு இனிப்புப் பலகாரத்தை செய்து, அந்த இனிப்புப் பலகாரத்தை குடும்பத்தோடு அமர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாப்பிடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் தேவையில்லாத பிரச்சனைகள் மன அழுத்தம் மன கஷ்டம் இவைகள் அனைத்தும் நீங்கி, உங்களுடைய இல்லம் சுபிட்சம் பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து, நல்ல பலனை பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.