வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம் எப்படி வரும்! அந்த தோஷம் நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

food-unavu
- Advertisement -

அன்றாடம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு தோஷம் காரணமாக இருக்கின்றது. எல்லா தோஷங்களுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்தவகையில் நாம் தினம்தோறும் சாப்பிடும் சாப்பாட்டில் மூலமும் தோஷம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அட சாப்பிடும் சாப்பாட்டில் கூடவா தோஷமா? என்று நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். மற்ற தோஷங்களை காட்டிலும் குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த தோஷத்திற்கு சக்தி அதிகம் என்றே சொல்லலாம்.

rice

ஏனென்றால் மற்ற தோஷங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சரியாகிவிடும். சாப்பாட்டில் தோஷம் என்பது, நம் ஆயுள் முழுவதுக்கும் தொடரும். அதாவது சாப்பாடு சாப்பிடும் காலம் வரை. சரி, இந்த தோஷம் எதனால் ஏற்படுகிறது? இந்த தோஷத்திற்கு நிவர்த்தி செய்யும் பரிகாரம் தான் என்ன? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

நம்முடைய வீட்டில் உள்ள பெண்கள் சாதம் வடித்தாலும் சரி, அல்லது ஆண்கள் சாதம் வடித்தாலும் சரி, எப்போதுமே ஒரே பக்குவத்தில் சரியான பக்குவத்தில் வடிப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம் சாதம் குழைந்து போவதற்கு வாய்ப்புள்ளது. சில சமயம் கொஞ்சம் வேகாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சில சமயம் தண்ணீர் விட்ட மாதிரி இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

rice

நம்முடைய வீட்டில் சாதம் பக்குவம் தவறிப் போகின்றது என்றாலே அதன் மூலம் நமக்கு தோஷம் உண்டாகி விட்டது என்பதே அர்த்தம். இப்படியாக, குழைந்த சாதத்தை உண்பதின் மூலமாகவோ அல்லது வேகாத சாதத்தை உண்பதின் மூலமாகவும் உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் நமக்கு ஏற்படும். உடல், மூளையை மந்தப்படுத்தும். மூளை மனதை மந்தப்படுத்தும். நாம் செய்யும் வேலையில் இதனால் சில தடைகள் உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்று சொல்வார்கள். சாப்பிட்ட பின்பு நமக்கு ஏற்படுகின்ற அந்த போதையை சில சமயங்களில் நம்முடைய வாழ்க்கையுடைய முன்னேற்றத்துக்கு தடையாக மாறி விடும். சரி, எப்படிபட்ட சாதத்தை சாப்பிட்டாலும் அதன் மூலம் நமக்கு தோஷம் ஏற்படாமலிருக்க, வாழ்வில் இடையூறு வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம்.

eating-food

ஒரு சுலபமான பரிகாரம். சுலபமான வேண்டுதல் உள்ளது. தட்டிலோ அல்லது இலையிலோ சாதத்தைப் போட்டு பின்பு, அதிலிருந்து ஒரு கைப்பிடி சாதத்தை எடுத்து நாராயணா! கோவிந்தா! சிவசிவா! என்றவாறு உங்களுக்கு விருப்பமான கடவுளின் பெயரை மூன்று முறை சொல்லி, அந்த உருண்டையை உங்களது தட்டில் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விடுங்கள். ஆனால், அந்த சாதத்தை சாப்பிடக்கூடாது. இறுதியில் நாய்க்கு போட்டுவிடவேண்டும்.

- Advertisement -

food

இப்படி செய்தால் தான் உண்ணும் சாப்பிட்டால் ஏற்படும் தோஷம் நம்மை பாதிக்காதிருக்கும். நிறைய பேர் சாப்பிடும் போது கவனித்திருப்பீர்கள். ஒரு பிடி உருண்டையை பிடித்து இறைவனை வேண்டிக் கொண்டு தட்டில் ஓரமாக வைப்பார்கள். அதற்கு காரணமும் இதுதான். விஷயம் தெரிந்தவர்களுக்கு புரியும். இந்த தோஷத்தால் எத்தனை பிரச்சினை வாழ்க்கையில் ஏற்படும் என்று! உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நாளை முதல் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து ஒரு கைப்பிடி சாப்பாட்டை இப்படி எடுத்து வைத்து தான் பாருங்களேன்!

இதையும் படிக்கலாமே
வீட்டில் துஷ்ட சக்திகள் நீங்க வேண்டுமா? இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -