சிறுவயதில் இருக்கும் பொழுது கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை பெற்றிருப்போம். வயதாக ஆக உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ ஏற்படக்கூடிய பாதிப்புகளின் விளைவாகவும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவாகவும் நம்முடைய தலைமுடியின் அடர்த்தி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முடி உதிர்தலும் அதிகமாக இருக்கும். இந்த முடி உதிர்தலை முற்றிலும் நீக்கி நம்முடைய அடர்த்தியான முடியை திரும்பப் பெறுவதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிமையாக ஒரே ஒரு இலையை வைத்து செய்யக்கூடிய ஒரு வழிமுறையும் இருக்கிறது. அதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்
காடு போல அடர்த்தியாக முடி வளர
தலைமுடி உதிர்விற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகிறது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரணங்களால் தலைமுடி உதிர்வு என்பது ஏற்படும். இந்த தலைமுடி உதிர்வை நிறுத்துவதற்கும் உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளர்வதற்கும் பலவிதமான ஹேர் பாக்குகளையும், ஹேர் மாஸ்கையும் பயன்படுத்தி இருப்போம். எவ்வளவு விஷயங்களை பயன்படுத்தினாலும் நம்முடைய பழைய முடி வளர்ச்சியை நம்மால் பெற முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரே ஒரு எளிமையான ஹேர் பேக்கை பயன்படுத்தினால் போதும். படிப்படியாக பழைய அடர்த்தியான முடியை பெற முடியும்.
பொதுவாகவே தலைமுடிக்கு ஹர்பாக் போட வேண்டும் என்றால் முதல் நாளே சில பொருட்களை ஊற வைத்து அரைத்து தலையில் தடவி அதை ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிப்பது என்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த வழிமுறைகளை பின்பற்றாமலேயே பாதியிலேயே நிறுத்தி விடும். வேலைக்கு செல்வதால் எந்தவித பேக்கும் போட இயலவில்லை என்பவர்களும் சரி குடும்பத்தில் இருக்கக்கூடிய வேலைகளை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது எனக்கென்று நேரம் ஒதுக்க இயலவில்லை என்பவர்களும் சரி இந்த ஒரு எளிமையான ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரே ஒரு பொருள் தான் வேண்டும். அதுதான் வெற்றிலை. வெற்றிலையில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. இரண்டு மூன்று வெற்றிலைகளை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். வடிகட்டியை பயன்படுத்த அதன் சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் தலைக்கு தேய்க்க கூடிய எண்ணையை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது தலைக்கு எப்படி எண்ணெய் வைப்போமோ, அதே போல் இதையும் தடவ வேண்டும். தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பிறகு எப்பொழுதும் தலைக்கு குளிப்பது போல் குளித்து வரலாம். இப்படி வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் நாம் செய்வதன் மூலம் நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகள் நீங்கும். முடி உதிர்தல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். புதிய முடிகளும் வளரும்.
இதையும் படிக்கலாமே: சோர்வான முகம் சூப்பராக மாற ஃபேஸ் பேக்
எளிமையாக தயார் செய்யக்கூடிய இந்த ஹேர் பேக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். சளி பிடிக்கும் என்ற எந்த பயமும் கிடையாது. அதேசமயம் நம் தலைமுடியின் பிரச்சினையையும் இது தீர்க்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.