அவர் இந்திய அணியில் விளையாட தகுதி உள்ளவர். தொடர்ந்து டக் அவுட் ஆவதால் அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் கிறிஸ் கெயில்-க்கு சமமானவர் – டிராவிட்

dravid

கடந்த சில வாரங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அதில் பெண்கள் குறித்த சர்ச்சையான பேட்டியினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுல்.

KL and HP

இந்த சர்ச்சை எல்லாம் ஓய்ந்து தற்போது பாண்டியா இந்திய அணியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று ஆடிவருகிறார். ராகுல் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிவருகிறார். இங்கிலாந்து உடனான போட்டியில் அவர் டக் அவுட் ஆனார். இதுகுறித்து இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் டிராவிட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் டிராவிட் கூறியதாவது : தொடர்ந்து டக் ஆவதாலும், ரன் குவிக்க முடியாததாலும் ராகுலின் திறமையினை குறைத்து மதிப்பிட வேண்டாம். உண்மையில் அவர் மிகச்சிறந்த வீரர். அவருக்கு இந்திய அணியில் இருக்க தகுதி உள்ளது. அவர் இந்திய அணிக்காக பல சிறப்பான இன்னிங்க்ஸை ஆடியுள்ளார். அவரை நான் வளரும் பருவத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.

rahul

மேலும், டி20 போட்டியில் அவர் சதமும் விளாசியுள்ளார். அவரின் அதிரடி ஆட்டம் எனக்கு கெயிலை நியாபகபடுத்தும் அந்த அளவிற்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர். எனவே, இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் வீரர்களின் மனநிலை புரிந்து அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவினை தாருங்கள் என்று டிராவிட் கூறினார்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே :

கோலியை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை. மற்றவர்களாலும் நிரூபிக்க முடியும் – இந்திய வீரர் ஓபன் டாக்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்