கோலியை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை. மற்றவர்களாலும் நிரூபிக்க முடியும் – இந்திய வீரர் ஓபன் டாக்

koli dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

boult

அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், டெய்லர் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்த போட்டி குறித்து இந்திய அணியின் வீரர் புவனேஷ்வர் குமார் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் குமார் கூறியதாவது : இந்திய அணியின் இந்த தோல்வி சற்று வருத்தம் அளிக்கிறது. கோலி மற்றும் தோனி போன்ற வீரர்கள் அணியில் இல்லாதபோது புதிய வீரர்கள் அந்த இடத்தினை சிறப்பாக பயன்படுத்தி தங்களை நிரூபிக்க வேண்டும். கில் நல்ல வீரர் என்றாலும் அறிமுக போட்டியிலே ஒருவரை சிறப்பாக ஆட எதிர்பார்க்க கூடாது. மற்ற வீரர்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடவேண்டும்.

bhuvi

அவருக்கான வாய்ப்பை தொடர்ந்து கொடுத்தால் அவர் சிறப்பாக வருவார். மேலும், கோலி ஒருவரை மட்டுமே நம்பி இந்திய அணி இருக்கிறது என்று கூறுவது தவறு. கோலி விரைவில் அவுட் ஆகியும் இந்திய அணி பொடியை வென்றுள்ளது. அணைத்து வீரராகளும் திறமையானவர்களே அதனால் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்கவேண்டும் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

கோலி மட்டும் ஓகே. மற்ற இந்திய வீரர்களின் குடும்பங்கள் இனி வெளிநாட்டு சுற்றுப்பயணம் வரக்கூடாது. அதனால் இவை அனைத்தும் நடக்கிறது – பி.சி.சி.ஐ தடாலடி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -