காரசாரமான பஞ்சாபி தாபா ஸ்டைல் ‘தம் ஆலு கிரேவி’! இந்த கிரேவியை உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

dum aloo gravy recipe
- Advertisement -

உருளைக்கிழங்கை வைத்து குருமா வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில் ஒரு ஆலு கிரேவியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது வரை நீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி தோசைக்கு பரோட்டாவிற்கு சூப்பரான சைட் டிஷ் இது.

potato-urulai

Step 1:
முதலில் 1 கிலோ அளவு உருளைக்கிழங்கை எடுத்து, தோல் சீவி ரொம்பவும் பெரியதாகவும் இல்லாமல், ரொம்பவும் சிறியதாகவும் இல்லாமல் க்யூப் வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் 100 கிராம் அளவு எண்ணெய் விட்டு, இந்த உருளைக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு அந்த எண்ணெய் இருக்கவேண்டும். அந்த எண்ணெயில், உருளைக்கிழங்கை  வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு 50 சதவிகிதம் வறுபட்டால் போதும். 5 நிமிடம் எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும்.

- Advertisement -

Step 2:
பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு பல் – 30 தோல் உரித்தது, இஞ்சி – 15 கிராம், வர மிளகாய் – 8 லிருந்து 10 உங்களது காரத்திற்கு ஏற்ப. பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் துண்டு துண்டாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொருட்களையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கிரேவி பதத்தில் அரைத்து தனியாக வைத்து விடுங்கள். ஓரமாக இருக்கட்டும்.

Step 3:
அடுத்தபடியாக, அந்த கடாயில் 100 கிராம் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் பட்டை – 4 துண்டு, லவங்கம் – 4, பிரிஞ்சி இலை – 2, மிளகு – 8, ஏலக்காய் – 4, சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Step 4:
இப்போது அடுப்பை ரொம்பவும் சிம்மில் வைத்து விடுங்கள். மசாலாப் பொருட்கள் சேர்த்து தாளித்த எண்ணெயில், மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/2 ஸ்பூன், சேர்த்து 30 வினாடிகள் வரை கிளறி, உடனேயே மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி விட வேண்டும். நீங்கள் எண்ணெயில் சேர்த்த மசாலா பொருட்கள் எக்காரணத்தைக் கொண்டும் கருதிவிடக்கூடாது.

alloo

Step 5:
மிக்ஸி ஜாரில் இருந்து கடாயில் ஊற்றிய விழுது 5 லிருந்து 8 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கவேண்டும். கடாயில் ஊற்றிய கிரேவியிலிருந்து எண்ணெய் கக்கி வெளிவரும் போது, முதலில் உருளைக்கிழங்கை ஃப்ரை செய்து வைத்துள்ளோம் அல்லவா, அதை எடுத்து கடாயில் கொட்டி விடுங்கள். ஒரு நிமிடம் உருளைக்கிழங்கை நன்றாக மசாலாவில் கிளறிவிட்டு, அதன்பின்பு 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு உப்பை போட்டு, கிளறி அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதாவது தம் போட வேண்டும்.

Chapathi maavu

வேகும் போதே உங்களுக்கு ஒரு வாசம் வரும். எல்லா மசாலா பொருட்களும் சேர்த்து, உருளைக் கிழங்கு வெந்து, வைத்திருக்கும் கிரேவி சூப்பராக தயாராகியிருக்கும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி, இறக்கினால் பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி ரெடி! சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது அல்லவா? ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -