துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இந்த 2 பொருளை மட்டும் நெய்வேதியமாக வைத்து விட்டால் போதும். எல்லா கஷ்டமும் உங்கள் குடும்பத்தை விட்டு நீங்கிவிடும்.

durgai
- Advertisement -

வாழ்க்கையில் வரக்கூடிய எவ்வளவு பெரிய துன்பங்கள், துயரங்கள், பிரச்சனைகளையும் துவம்சம் செய்யக்கூடிய சக்தி அந்த துர்க்கை அம்மனுக்கு உண்டு. செவ்வாய்க்கிழமை என்றாலே துர்கை அம்மன். துர்க்கை அம்மன் என்றால் நினைவுக்கு வருவது செவ்வாய்க்கிழமை. இந்த செவ்வாய் கிழமையில் துர்க்கை அம்மனை எப்படி வழிபாடு செய்தால், அஷ்ட ஐஸ்வர்யத்தையும், அம்பாளின் அனுகிரகத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் பெற முடியும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சொல்லும் விரிவான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்‌. செவ்வாய்க்கிழமை தோறும் துர்கை அம்மனை மட்டும் இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் தான் இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள். அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையின் தரம் உயரும்.

செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு வைக்க வேண்டிய நெய்வேதியம்:
செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே அது ராகு கால நேரம் தான் சிறப்பு. முடிந்தால் செவ்வாய் கிழமையில்  3.00 லிருந்து 4.30 ராகு கால நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மாலை 6.00 மணிக்கு மேல் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்றும் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டாம். துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லும்போது மணக்க மணக்க வாசம் நிறைந்த பூக்களை அம்பாளுக்காக எடுத்துச் செல்லுங்கள். துர்க்கை அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். 2 மண் அகல் விளக்குகள் ஏற்றலாம், அல்லது எலுமிச்சம் பழம் விளக்கு ஏற்றுவதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எலுமிச்சம் பழம் விளக்கும் தாராளமாக ஏற்றலாம் தவறு கிடையாது.

விளக்கு ஏற்றி வைத்து விட்டு அதன் பின்பு இந்த பிரசாதத்தை அம்பிகைக்கு வைக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, அதோடு தேன் சிறிதளவு ஊற்றி கலந்து அப்படியே அம்பாளுக்கு நிவேதனம் செய்ய சொல்லி குருக்களிடம் கொடுத்து விடுங்கள். அவர் அந்த பிரசாதத்தை துர்கை அம்மன் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து திரும்பவும் உங்களுக்கு கொடுத்து விடுவார். இந்த வழிபாட்டை செய்யும்போது மனதை ஒருநிலைப்படுத்தி துர்க்கை அம்மன் முன்னாள் நேராக முட்டிப்போட்டு, மண்டியிட்டு வரங்களை கேட்க வேண்டும். நீங்கள் கேட்ட வரம் அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

பூஜையும் வேண்டுதலும் நிறைவடைந்த பிறகு அந்த நிவேதனத்தை வீட்டிற்கு கொண்டுவந்து தண்ணீரில் கலந்து, எலுமிச்சம் பழச்சாறாக நீங்கள் குடித்துக் கொள்ளலாம். உங்கள் கணவர் குழந்தைகள் இவர்களுக்கும் கொடுக்கலாம். தவறு கிடையாது. இந்த ஒரு சின்ன எளிமையான வழிபாட்டை வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் ராகுகாலம் நேரத்தில் செய்து வந்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரிய பெரிய கஷ்டங்கள் எல்லாம் கூட படிப்படியாக குறைய தொடங்கும். கடன் சுமை இருக்காது. குடும்பத்தில் மங்களகரமான காரியங்களுக்கு தடை ஏற்படாது. பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் தான் உங்கள் தலை எழுத்து என்று எழுதி இருந்தாலும், அதை அழித்துவிட்டு தாராளமான பண வரவை கொடுக்கும் திலகம்.

செவ்வாய்க்கிழமையில் ராகு கால நேரத்தில் உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் மட்டும் மாலை 6.00 மணிக்கு மேல் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. எளிமையான வழிபாடு. கஷ்டத்தை போக்கும் வழிபாடு. அம்பாள் அருள் ஆசையை முழுமையாக பெற்று தரக்கூடிய வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -