உங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கஷ்டத்தை மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இனி சந்தோஷமான வசந்த காலமும் உங்கள் வாழ்க்கையில் வீசும். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

amman1
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே அதி தீவிரமான கஷ்டத்தை அனுபவித்து வந்திருப்பார்கள். சில கஷ்டத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதே சமயம் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இப்படி தீராத துன்பத்திலும் துயரத்திலும் அவதிப்பட்டு வருபவர்களுக்கு ஒரு வழி கிடைக்க வேண்டுமென்றால் அந்த வழியை காட்ட நிச்சயமாக அந்த ஆண்டவனால் தான் முடியும். இறைவனின் பாதங்களை சரண் அடைவதை தவிர வேறு வழியே கிடையாது.

நம்முடைய கஷ்ட நஷ்டங்களை சொடக்கு போடும் நேரத்தில் அந்த ஆண்டவனாலும் தீர்த்துவைக்க வாழ்க்கை சினிமா கிடையாது. இக்கட்டான கஷ்டத்தை தீர்த்து வைப்பதற்கு காலமும் நேரமும் கனிந்து வர வேண்டும். தொடர்ந்து 27 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தீராத எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அது ஒரு முடிவுக்கு வரும்.

- Advertisement -

27 வாரங்கள் எங்களால் செய்ய முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் 9 வாரம், 11 வாரங்களாவது இதை செய்ய வேண்டும். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வந்து விட்டது என்றால், அந்த வாரத்தை தவிர்த்துவிட்டு அடுத்த வாரம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

இந்த பரிகாரத்தை செய்ய ஒற்றைப்படையில் எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ளவேண்டும். 9, 11 என்று உங்கள் விருப்பம் போல எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் கயிறால் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கோர்த்து, ஒவ்வொரு எலுமிச்சம்பழத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, இந்த மாலையை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் துர்கை அம்மன் சிலைக்கு போட வேண்டும்.

- Advertisement -

அதாவது எந்த கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவிலில் துர்க்கை அம்மன் சன்னிதானம் இருந்தால், அந்த துர்க்கை அம்மனுக்கு இந்த மாலையை போடவேண்டும். அங்கிருக்கும் அர்ச்சகரிடம் சொல்லி அவர் கையாலேயே இந்த மாலையை அம்பாளுக்கு போட்டு விடுங்கள். (எலுமிச்சம்பழத்தை உங்கள் கையில் எடுத்து மாலையாக கோர்த்து அம்பாள் கழுத்தில் போடும் வரை உங்களுடைய எந்த கஷ்டம் தீர வேண்டும் அதை மனதார நினைத்துக்கொண்டே மாலையை கட்ட வேண்டும்.)

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அது அம்பாளின் கழுத்திலேயே இருக்கட்டும். மறுநாள் காலை நீங்கள் கோவிலுக்கு சென்று அந்த மாலையை வாங்கி வீட்டிற்கு எடுத்து வரவேண்டும். உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்த மாலையிலிருந்து மூன்று எலுமிச்சம் பழங்களை எடுத்து ஒரு சிவப்பு துணியில் வைத்து, முடிச்சாக கட்டி நிலை வாசலில் கட்டி விடுங்கள். மீதமிருக்கும் எலுமிச்சம் பழத்திலிருந்து உங்கள் வீட்டுக்கு தேவையான அளவு எலுமிச்சம்பழச் சாறு எடுத்து, அந்தச் சாறை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குடித்து விடுங்கள்.

- Advertisement -

மீதமுள்ள எலுமிச்சம் பழங்களில் இருந்து சாறு எடுத்து எலுமிச்சம்பழ சாதத்தை செய்து, ஏழை எளியவர்களுக்கு அன்னதானமாகக் கொடுக்கலாம். அன்னதானம் செய்ய முடியவில்லை என்றால் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு இதை பிரசாதமாக கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விட்டு சனிக்கிழமை பிரசாதத்தை செய்து கொடுக்க முடியவில்லை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை கூட பிரசாதத்தம் செய்து கொடுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

வாரம் தோறும் உங்கள் நிலை வாசலில் கட்டி வைத்திருக்கும் பழைய எலுமிச்சம்பழம் முடிச்சை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதியதாக அடுத்த வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு போட்ட எலுமிச்சை பழ மாலையிலிருந்து, 3 எலுமிச்சை பழங்களை எடுத்து கட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்தை கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய நாள் முதலில் உங்களுடைய பிரச்சனைகளுக்கு வழி கிடைக்கத் தொடங்கிவிடும்.

ஒருவேளை உங்களுடைய வீட்டின் அருகில் துர்கை அம்மன் சன்னிதானம் இல்லை என்றால், வேறு ஏதாவது அம்மனுக்கு கூட இந்த மாலையை செலுத்தி உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம். நிச்சயமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் அந்த அம்பாள் நல்லதொரு வழியை காட்டி தருவாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -