வைகுண்ட துவாதசி தின விரதம் மற்றும் வழிபாடு முறைகள்

dwadasi-perumal
- Advertisement -

மார்கழி மாதத்தில் பெருமாளை வழிபடுவதற்குண்டான ஒரு சிறப்பான நாளாக இருப்பது வைகுண்ட ஏகாதசி தினமாகும். ஏகாதசி என்று கூறப்பட்டாலும் அதற்கு மறுதினமான “துவாதசி” தினமும் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கக்கூடிய ஒரு தினமாகவே தான் இருக்கிறது. இந்த துவாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vaikunta-ekadasi

வைகுண்ட ஏகாதசி தினம் முழுவதும் திட உணவு ஏதும் உண்ணாமல், கண் விழித்து விரதம் மேற்கொண்டவர்கள் மறுதினமான துவாதசியன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டிலிருக்கும் பெருமாள் படத்திற்கு மலர்களை சாற்றி, தீபமேற்றி அகத்திக்கீரை, நெல்லிக்காய், அவரைக்காய் போன்ற காய்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையும் சேர்த்து சமைக்கப்பட்ட பதார்த்தங்களையும், அரிசி சாதத்தையும் பெருமாளுக்கு நைவேத்தியம் வைத்து வணங்கி வேண்டும்.

- Advertisement -

பிறகு கொஞ்சம் சாதத்தை எடுத்து வெளியில் காகங்களுக்கு வைத்து, மறைந்த உங்கள் முன்னோர்களை வணங்கி மேற்கூறிய காய்கறிகள் சேர்த்த உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இவற்றை காலை 6 மணிக்குள்ளாக செய்வது மிகவும் சிறப்பு. திருமாலின் அம்சம் நிறைந்த அகத்தி கீரையையும், லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்த நெல்லிக்காய்களையும் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் அவர்களின் ஆசிகள் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

food

ஏகாதசி தினத்தில் உண்ணாமல், உறங்காமல் விரதம் இருந்தவர்களுக்கு துவாதசி அன்று சாப்பிட்ட பிறகு தூக்க கலக்கம் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும் இத்தினத்தில் பகலில் எக்காரணம் கொண்டும் உறங்க கூடாது. பகல் நேரத்தில் விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற நூல்களை படித்தும், விஷ்ணு மந்திரங்கள் ஜெபித்தும் துவாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்றைய மாலை வேளையில் பெருமாளை வழிபட்டு, உணவு உண்டதும் இரவு 9.30 மணிக்கு மேலாக பெருமாளை வழிபட்டு நன்றி கூறி உறங்குவது சரியான முறையாகும்.

- Advertisement -

perumal

ஏகாதசி விரதம் எப்படி மேற்கொள்கிறோமோ, அதே போன்று துவாதசி விரதத்தையும் அனுஷ்டித்தால் மட்டுமே வைகுண்ட ஏகாதசி விரதம் முழுமை பெற்று விரதத்தின் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த துவாதசி தினத்தில் காலையில் நாம் காகங்களுக்கு அன்னமிடுவதால், காகங்கள் வடிவில் இருக்கும் நமது பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களின் ஆசிகளும் கிடைத்து நன்மையான பலன்களை தருகிறது.

இதையும் படிக்கலாமே:
2019 ஆம் ஆண்டின் கிருத்திகை நட்சத்திர தினங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dwadasi vratam in Tamil. It is also called Vaikunta dwadasi in Tamil or Dwadashi tithi in Tamil or Vaikunta ekadasi and dwadasi in Tamil or Dwadasi thithi in Tamil or Dwadasi valipadu in Tamil.

- Advertisement -