கிருத்திகை நாட்கள் 2023 | Krithigai 2023 dates in Tamil

- Advertisement -

கிருத்திகை நட்சத்திரம் 2023 | Kiruthigai 2023 dates in Tamil

ஜோதிட அறிவியலின் கணக்கின் படி நட்சத்திரங்களின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தேழு. அந்த இருபத்தேழு நட்சத்திரங்களில் சூரியனுக்கு மிகவும் நெருங்கிய முதல் நட்சத்திரமாக இருக்கிறது கார்த்திகை நட்சத்திரம். முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை 2023 தேதி (Kiruthigai dates 2023) குறித்த விவரங்கள் மிக தெளிவாக கீழே உள்ளது.

Lord Murugan Vel

Kiruthigai dates 2023 Tamil | Krithigai 2023 dates Tamil

MonthDateDayType
Krithigai January 2023January 03 2023TuesdayMargali Krithigai
Krithigai January 2023January 30 2023MondayThai Krithigai
Krithigai February 2023February 26 2023SundayMaasi Krithigai
Krithigai March 2023March 25 2023SaturdayPanguni Krithigai
Krithigai Arpril 2023April 22 2023SaturdayChithirai Krithigai
Krithigai May 2023May 19 2023FridayVaigasi Krithigai
Krithigai June 2023June 15 2023ThursdayVaigasi Krithigai
Krithigai July 2023July 13 2023ThursdayAani Krithigai
Krithigai August 2023August 09 2023WednesdayAadi Krithigai
Krithigai September 2023September 05 2023TuesdayAavani Krithigai
Krithigai October 2023October 3 2023TuesdayPuratasi Krithigai
Krithigai October 2023October 30 2023MondayAipasi Krithigai
Krithigai November 2023November 26 2023SundayKarthigai thirunaal 2023
Krithigai December 2023December 24 2023SundayMargazhi Krithigai

kiruthigai January 2023 date / krithigai January 2023: ஜனவரி 3 2023
கார்த்திகை தீபம் தேதி: நவம்பர் 26 2023

- Advertisement -

கார்த்திகை என்றால் என்ன? | Krithigai 2023 dates in Tamil

அறுபடை வீடுகளுக்கு அதிபதியான முருகப்பெருமானின் நட்சத்திரமாக திகழ்கிறது கிருத்திகை நட்சத்திரம். இதனை கார்த்திகை நட்சத்திரம் என்றும் கூறுவது உண்டு. கிருத்திகை (அ) கார்த்திகை நட்சத்திரமானது மாதம் தோறும் வரக்கூடிய ஒன்றாகும். சில மாதங்களில் இரண்டு முறை கூட கிருத்திகை நட்சத்திரம் வரும். அந்த குறிப்பிட்ட தினமானது முருகப்பெருமானுக்குரிய விஷேஷ தினமாக கருதப்படுகிறது. முருகப்பெருமானனுக்கு கார்த்திகேயன் என்றொரு பெயர் இருப்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த பெயர் தான் பிற்காலத்தில் மருவி கார்த்திகை என்றானது என்று கூறப்படுகிறது.

கார்த்திகை 2023 தேதி | kiruthigai 2023 dates

2023 ஐ பொறுத்தவரையில் மொத்தமாக 14 நாட்கள் கார்த்திகை நாட்களாக வருகிறது. அதில் முருகப்பெருமானுக்குரிய செவ்வாய் கிழமையில் ஜனவரி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் கார்த்திகை நாட்கள் அமைகிறது. இந்த நாட்களில் முருகப்பெருமானை வணங்குவது மிக சிறப்பான நன்மைகளை தரும்.

- Advertisement -

கிருத்திகை விரதம் | Krithigai this month | Kiruthigai viratham dates 2023

கிருத்திகை விரதம் என்பது முருகப்பெருமானை மனதார நினைத்து இருக்கக்கூடிய ஒரு விரதமாகும். காலையில் எழுந்து நீராடிவிட்டு, மாலைவரை உணவு எதுவும் உண்ணாமல் முருகப்பெருமானை நினைத்து அவரது மந்திரங்களையோ அல்லது கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றையே படித்து மாலை விரதத்தை முடிப்பது சிறந்த பலனை தரும். தொடர்ச்சியாக இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு முருப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தவர்கள் என்றால் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும் அதனை தொடர்ந்து வரும் மூன்று பாதங்கள் ரிஷப ராசியிலும் வருவதனால் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நபராக விளங்குவீர்கள். மேலும் அழகிய தோற்றத்துடனும் வலிமைவாய்ந்த தேகத்தினையும் பெற்றவராக நீங்கள் இருப்பீர்கள்.

- Advertisement -

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் உணவிஷயத்தில் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டினை பின்பற்றுவீர்கள். குறிப்பாக, பசியினை கொஞ்சம் கூட ஏற்கும் பழக்கம் உங்களிடம் இருக்காது. பழைய உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் குணம் உங்களிடம் காணப்படும். சூடான உணவினையே அதிகம் ருசிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கும்.

கல்வி விடயத்தினை பொறுத்த மட்டில் கல்வியிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். ஆளுமைத்திறன் உங்களிடம் அதிகம் இருப்பதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் தலைவராகவும் இருக்க வாய்ப்புண்டு. உங்களிடம் உள்ள மனபாடத்திறன் மற்றும் பேச்சுத்திறன் காரணமாக விரைவில் வேலைவாய்ப்பினை பெறுவீர்கள்.

மேலும் ஆசிரியராகவும் மற்றும் வழக்கறிஞர் போன்ற பிரிவுகளில் வேலைக்கான உங்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதேபோன்று கிடைத்த வேலையில் உங்களின் முழுசுதந்திரத்தை எதிர்பார்க்கும் குணமுடைய நீங்கள் ஒருவேளை உங்களை யாராவது கட்டுப்படுத்துகிறார்கள் என்றால் அந்த வேலையினை திறக்கவும் தயங்க மாட்டீர்கள்.மேலும் 40 வயதினை நெருங்கும்போது சுயதொழில் துவங்கும் யோசைனையும் உங்களிடத்தில் வரும்.

திருமண வாழ்க்கை பொறுத்த மட்டில் மனைவின் சொல்லை அவ்வளவு எளிதாக ஏற்கமாட்டர்கள். உங்களுடைய முடிவினையே அழுத்தமாக சொல்வீர்கள் எதற்கும் விட்டுக்கொடுத்து போகும் எண்ணம் உங்களிடம் இருக்காது. காதல் போன்ற விடயங்களில் உங்களது நாட்டம் இருக்காது. ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நிறைய யோசிப்பீர்கள். உங்களுடைய பிள்ளைகளை செல்வாக்காக வளர்க்கவேண்டும் என்று விரும்புவீர்கள்.

உடைகள் ஆபரணங்கள் எதையும் உங்களுக்கு அவ்வளவாக வாங்க பிடிக்காது. ஆனால் உங்களளது சந்ததிக்கு உங்களால் முடிந்த அளவு உழைத்து தருவீர்கள். உடல் ஆரோக்கியம் சற்று ஏற்றத்தாழ்வான நிலையில் இருக்கும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள் மற்றும் அவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் குறித்த பல தகவல்களை எமது அடுத்த குறிப்பினில் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கார்த்திகை நட்சத்திரம் அதிர்ஷ்டங்கள் :

அதிர்ஷ்ட எண்கள் : 1, 6, 9.
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூன், வெளிர் சாம்பல்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள் : ஞாயிறு, வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினம் : ஸ்டார் ரூபி
அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்

English Overview:
Here we have given krithigai date 2023 or krithigai 2023 dates or Karthigai 2023 dates. It covers kiruthigai january 2023 or krithigai in January 2023, krithigai in February 2023, krithigai in March 2023, krithigai in April 2023, krithigai in May 2023, krithigai in June 2023, krithigai in July 2023, krithigai in August 2023, krithigai in September 2023, krithigai in October 2023, krithigai in November 2023 and krithigai in December 2023.

- Advertisement -