தொங்கும் காது ஓட்டைகளை 15 நாட்களில், அறுவை சிகிச்சை இல்லாமல் வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து எப்படி சரிசெய்வது? தெரிந்து கொள்ளலாமா?

ear

பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில், இந்த காது ஓட்டை பெரியதாக இருப்பதும், ஒரு பெரிய பிரச்சனை தான். காது ஓட்டை பெரியதாக உள்ளவர்கள் கம்பலை சுத்து மாட்டில் இல்லாமல் போடவே முடியாது. சில இளம் பெண்களால் பெரிய தோடுகளை போட முடியாது. அப்படிப் போட்டால், கம்பல் இந்தப் பக்கம் போய் அந்தப் பக்கம் வெளியே வந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றால், அது அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி. ஆனால், எல்லோராலும் அறுவைசிகிச்சை செய்துகொள்ள முடியாது. அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு ஒரு வழி உள்ளது. உங்களது காது ஓட்டைகளை, அறுவை சிகிச்சை செய்யாமல், கூடிய விரைவில் சிறிதாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ear1

இதற்கு, நம் வீட்டில் இருக்கும் மைதா மாவு, ஆப்ப சோடா இந்த 2 பொருட்களுமே போதும். உங்களுடைய சருமத்திற்கு ஆப்பசோடா சேராது என்றால், அதற்கு பதிலாக கான்பிளவர் மாவு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் மைதா மாவு, 1 ஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

முதலில் உங்களது கம்பளை கழட்டி விட்டு, அந்த இடத்தில் இருக்கும் அழுக்கை சுடு தண்ணீரால் நன்றாக கழுவி, காட்டன் துண்டால் துடைத்து விடுங்கள். இரண்டாவதாக, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் இதில் எந்த எண்ணை உங்கள் வீட்டில் இருக்கின்றதோ அந்த எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெயை ஒரு சொட்டு உங்கள் விரல்களால் தொட்டு, உங்கள் காது ஓட்டை இருக்கும் இடத்தில் ஒரு நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்து கொடுக்கவும். அதன் பின்பு அந்த எண்ணையை துண்டில் துடைத்து எடுத்துவிடுங்கள்.

மூன்றாவதாக, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மைதா மாவு சோடா உப்பு சேர்த்த பேஸ்டை உங்களது காது ஓட்டையின் மேல் முன் பக்கமும் பின் பக்கமும் முழுமையாக நிரம்பிய படி தடவி விட வேண்டும். அந்த ஓட்டையை சுற்றியும் தடவி விட வேண்டும். இந்தப் பேஸ்ட் குறைந்தது 1 மணி நேரமாவது அந்த ஓட்டை பகுதியில் கீழே விழாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் அலுவலகத்துக்கு செல்பவர்களாக இருந்தால் இரவு நேரம் முழுவதும் இந்த பேஸ்டை உங்களது காதுகளில் அப்படியே விட்டு விடலாம். தவறு ஒன்றும் கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்மணிகளாக இருந்தால், பகல் நேரத்திலும் இந்த பேஸ்டை உங்களது காது ஓட்டைகளில் தடவிக்கொண்டு, 6 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

ear2

அதன் பின்பு சுத்தமான தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். இப்படியாக 15 நாட்கள் தொடர்ந்து இந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் உங்களது காது ஓட்டைகள் சுருங்க ஆரம்பிப்பதை உங்களால் உணர முடியும். இந்த பேஸ்டை பயன்படுத்திவிட்டு எடை அதிகமாக உள்ள கம்பளை பயன்படுத்த கூடாது. மீதமுள்ள பேஸ்டை ஃப்ரிட்ஜில் வைத்து 15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சில பேருடைய தோல் சீக்கிரமே சுருங்கி ஓட்டை சிறியதாகி விடும். சில பேருடைய தோல் சுருங்குவதற்கு சிறிது காலம் எடுக்கும். சிலபேருக்கு இந்த பேஸ்ட் பலனளிக்காது. காரணம் இதில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லை.

egg-white

நீங்கள் முட்டை சாப்பிடுபவர்களாக இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சொட்டு சொட்டு, உங்களது காது ஓட்டைகளில் 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் வரை ஊற வைத்து, உடனடியாக பத்தே நிமிடத்தில் கழுவிவிட வேண்டும். இப்படி செய்தாலும் காதுகளில் உள்ள ஓட்டை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பிக்கும்.

ear3

முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தால் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே வாருங்கள். காது ஓட்டை ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட அளவு குறையும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதாவது அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதவர்கள் தங்களது காது ஓட்டைகளை முடிந்தவரை சுருக்கிக் கொள்வதற்கு இது ஒரு சிறப்பான வழி அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே
தாய் தந்தையர் இறந்த பின்பு, அவர்களை மறப்பதால் மட்டும் ஏற்படக்கூடியதா பித்ரு சாபம்! இல்லை. இந்த தவறை நீங்கள் செய்திருந்தாலும், பித்ரு சாபம் உங்களை தொடரும். அது எந்த தவறு? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.