தாய் தந்தையர் இறந்த பின்பு, அவர்களை மறப்பதால் மட்டும் ஏற்படக்கூடியதா பித்ரு சாபம்! இல்லை. இந்த தவறை நீங்கள் செய்திருந்தாலும், பித்ரு சாபம் உங்களை தொடரும். அது எந்த தவறு? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நமக்கு வாழ்நாளில் தீர்க்கமுடியாத கஷ்டம் ஏற்படுவதற்கு பித்ரு சாபம் ஒரு காரணம் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. இந்த பித்ரு சாபம் இருப்பதை அவரவருடைய ஜாதகத்தை வைத்து ஜோதிடர்கள் கணித்து விடுவார்கள். இந்த பித்ரு சாபம் எதனால் ஏற்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அதாவது, நம்முடைய தாய் தந்தையர் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை, முறையாக செய்ய தவறியவர்களுக்கு இந்த பித்ரு சாபம் ஏற்படும் அல்லவா? ஆனால், இறந்த பின்பு அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை, செய்ய மறப்பதால் மட்டுமா பித்ரு சாபம் உண்டாகிறது! இல்லை. பித்ரு சாபம் உண்டாக மற்றொரு காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா?

pithru dhosam

நம்முடைய தாய் தந்தையரை நாம் உயிரோடு இருக்கும் போது சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட நமக்கு பித்ரு சாபம் உண்டாகும். அதாவது நம்முடைய தாய் தந்தையர், அவர்களுடைய தாய் தந்தையரை நன்றாக பார்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முன் வாழ்ந்த முன்னோர்கள், அவர்களை பெற்றவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். இப்படியாக ஒரு தலைமுறையில் செய்யப்பட்ட பாவம் அடுத்த தலைமுறையை தொடர்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

முடிந்தவரை இறந்த பின்பு நாம் அவர்களை நினைவில் வைத்துள்ளோமோ, இல்லையா என்பது இரண்டாவது விஷயம். முதலில் அவர்கள் உயிருடன் இருக்கும் போது, தாய் தந்தையரின் மனது நோகக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். (இதற்காக இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யக்கூடாது என்பது அர்த்தம் கிடையாது.) நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உங்களுடைய தலைமுறையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம், அல்லது நீங்களே உங்களது தாய் தந்தையரை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.

pithru dosham

உயிருடன் இருக்கும் வரை தாய் தந்தையரை சரியாக கவனிக்கவில்லை. அவர்கள் இறந்த பின்பு, பித்ரு வழிபாட்டை தவறாமல் செய்து வருகிறீர்கள் என்றால், இதில் என்ன புண்ணியம் இருக்கிறது? சற்று சிந்தித்து பாருங்கள்! பித்ரு வழிபாட்டை மறவாமல் சரியாக செய்தும் உங்களுடைய முன்னேற்றத்தில் தடை இருந்து கொண்டே இருந்தால், உங்களுடைய முன் தலைமுறையில் கட்டாயம் யாராவது ஒருவர் பெற்றவர்களை சரியாகப் பார்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

இதற்கான சுலபமான ஒரு தீர்வு உள்ளது. தினமும் காலை எழுந்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, 6.00 மணிக்கு முன்பாக அதாவது காலை 5.45 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். உங்களுடைய தாய் தந்தையருக்கு விருப்பமான உணவை, ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த பொருளை உங்களது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, சூரிய பகவானைப் பார்த்து ‘பித்ரு சாப நிவர்த்தனம், பித்ரு கர்மா நிவர்த்தனம்’ என்று சொன்னபடி உங்களது தாய் தந்தையரது பெயரை மூன்று முறை உச்சரித்து, சாபம் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

surya-namaskar1

பின்பு அந்த உணவை பசுமாட்டிற்கு சாப்பிட தரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். குடும்பத்தில் இருக்கும் கஷ்டம் படிப்படியாக குறைய ஆரம்பிப்பதை கண்கூடாக காணமுடியும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.