காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற காது தொந்தரவுகளை குணப்படுத்தும் சமையலறை பொருட்கள்! இது தெரிஞ்சா கேட்காத காதும் மீண்டும் பழையபடி நல்லாவே கேட்கும்.

ear-pain-buds-garlic
- Advertisement -

பொதுவாக காது வலி இருப்பவர்களுக்கு பலவிதமான தொந்தரவுகள் இருக்கக்கூடும். காதில் மட்டுமே பிரச்சனை இருந்தால் காது வலி வருவதில்லை! வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களாலும் காது வலி வரக்கூடும். அது மட்டும் அல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேருகிறது. எத்தகைய காது பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் நம் சமையலறை பொருட்களிலேயே உள்ளது. அவை என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற அரிய ஆரோக்கிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளே, நடுவில், வெளியே என்று மூன்று பிரிவுகள் காதிற்கு உண்டு. இதில் நோய் தொற்றுகள், டான்சில் என்னும் சதை வளர்ச்சி, சைனஸ் போன்றவற்றாலும் பிரச்சனைகள் காதில் ஏற்படுவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உண்டாகிறது. கழுத்தில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடைந்தாலும் காதிற்கு தொந்தரவுகள் ஏற்படும். இப்படி பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய காது தொடர்பான தொந்தரவுகளை நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து எளிதாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக காது பிரச்சனை இருப்பவர்கள் பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு. எந்த காரணங்கள் கொண்டும் பட்ஸை உபயோகப்படுத்தக்கூடாது. இது மேலும் மேலும் தொந்தரவை ஏற்படுத்துமே தவிர, வலியை குறைக்க போவது கிடையாது.

- Advertisement -

ஒருமுறை பட்ஸ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், அதிலிருந்து மீளுவது என்பது சிரமம் ஆகிவிடும். அதுவே உங்களுடைய காதுக்கு ஆபத்தாகவும் முடிய கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். காதில் வலி இருந்தால் பலரும் தேங்காய் எண்ணெயை ஊற்றுவார்கள். லேசான காது வலிக்கு மல்லிகை எண்ணெயை ஊற்றினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வீட்டில் இருக்கும் ரெண்டு நாட்டு பூண்டை இடித்து சாறு எடுத்து இரண்டு சொட்டு அளவிற்கு காதுக்கு உள்ளே போகும்படி விட்டுப் பாருங்கள், அரை மணி நேரத்தில் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தால் காது வலி மெல்ல மெல்ல குறை ஆரம்பித்து விடும். நாட்டுப்பூண்டு பிங்க் நிறத்தில் இருக்கும்.

காதில் இரைச்சல் அல்லது அடைப்பு இருந்தால், சரியாக காது கேட்காதது போல தோன்றினால் உடனே ஒரு பெரிய பூண்டு பல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். காதிற்குள் பூண்டு சென்று விடக்கூடாது. அந்த அளவிற்கு பெரியதாக பார்த்து எடுத்து தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் அதை காதல் பஞ்சு வைப்பது போல வைத்துக் கொள்ளுங்கள். அடைப்பு, இறைச்சல் எதுவும் அரைமணியில் மாயமாய் மறைந்திருக்கும். சைனஸ் தொந்தரவால் காது வலி இருந்தால் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணையை காய்ச்சிக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு கிராம்பு மற்றும் ரெண்டு இடித்த பூண்டு பல் சேர்த்து கரு நிறம் ஆகும் வரை கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பை அனைத்து நன்கு குளிர்ச்சியாக ஆறவிட்டு விடுங்கள். பிறகு அதிலிருந்து சில துளிகள் காதுக்குள் விட்டால் சைனஸால் ஏற்படக்கூடிய காது வலி படிப்படியாக நிவாரணம் காணும்.

- Advertisement -

காதில் சீழ் பிடித்து காது வலி ஏற்பட்டால் திருநீற்றுப் பச்சிலையை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் இருந்து சில சொட்டுக்கள் சாறு எடுத்து காதில் விட்டால் உடனடியாக குணமடையும், சீழ் வெளியேறிவிடும். சிறு குழந்தைகளாக இருந்தால் நேரடியாக இப்படி காதில் விடாமல், நான்கைந்து கல் உப்பை லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் திருநீற்றுப் பச்சிலையை சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை காதை சுற்றிலும் இளஞ்சூட்டில் பற்று போல போட்டு விட்டால் உள்ளே இருக்கும் சீழ் காய்ந்து வெளியேறிவிடும்.

காதில் சீழ் பிடித்து தொற்று ஏற்பட்டு இருந்தால், இந்த தொற்றிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க ஒரு வரமிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் காம்பை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் விதைகளை எல்லாம் எடுத்து நன்கு கழுவி உலர வைத்துக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்து உலர்ந்ததும், அந்த ஓட்டைக்குள் நல்லெண்ணெய் ஊற்றி நெருப்பில் காண்பிக்க வேண்டும். இளம் சூடாக ஆனதும் காதில் அதை அப்படியே ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் சீழ் தொற்று குறையும். துளசி இலை சாறு அல்லது தாழம்பூவை நெருப்பில் காட்டி அதிலிருந்து கிடைக்கக்கூடிய சாற்றை காதில் விட்டால் கட்டி, கொப்பளம் போன்றவை இருந்தால் அது விரைவாக குணமடையும். மேலும் காதில் எந்த ஒரு மருந்தை நீங்கள் ஊற்றுவதாக இருந்தாலும் அதை ஒரு முறை வெள்ளை துணியில் விட்டு வடிகட்டி காதில் பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -