சீப்பு கிளீன் பண்ண சோம்பேரித்தனமா இருக்கா? கையே வைக்காம ஈஸியா எப்படி கிளீன் பண்ணலாம்?

comb-cleaning

சீப்பு கிளீன் பண்ண நிறைய பேருக்கு பயங்கரமான சோம்பேறித்தனம் இருக்கிறது என்று சொல்லலாம். எல்லோரும் அவர்கள் அவர்களுடைய சீப்பை தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. சீப்பை தூய்மை செய்வதில் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீக்குவது நம்மால் முடியாத காரியம். ஆனால் கையால் தேய்க்காமல் சுலபமான முறையில் நீங்கள் உபயோகப்படுத்தும் எல்லா சீப்புகளையும் ஒரே நேரத்தில் மொத்தமாக எப்படி சுத்தம் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

dirty-comb

சீப்பில் இருக்கும் அழுக்குகள் வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும். சீப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் தான் மிக மிக நல்லது. ஒரு சிலரை பார்த்தால் சீப்பில் முடிகளை கூட எடுத்துப் போடாமல் அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற செயல்களை வீட்டில் செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். சுத்தம் இல்லாத இடத்தில் மகாலட்சுமியின் தங்குவதில்லை. பிறகு எப்படி அந்த வீட்டில் வருமானம் அதிகரிக்க முடியும்? முதலில் நீங்கள் உங்களையும், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சீப்பில் இருக்கும் ஒருவருடைய முடியை இன்னொருவர் எடுத்துப் போடுவது மிகவும் தவறாகும். அவர்கள் பயன்படுத்திய சீப்பில் அவர்களே முடியை எடுத்து போட்டு விட்டு, அதன் பிறகு எடுத்த இடத்தில் வைப்பது தான் நல்லது. சீப்பிற்கு இவ்வளவு சாஸ்திரம் தேவையா? என்று நீங்கள் யோசிக்கலாம். நாம் பயன்படுத்தும் பொருட்களின் சுத்தமே நம்முடைய குணாதிசயத்தை நிர்ணயிக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

hair-in-comb1

வீட்டிற்கு யாராவது வந்து சீப்பை கேட்கும் பொழுது அதை எடுத்து தருவதற்கு நமக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்? ஏனென்றால் அதில் அழுக்குகளோடு இருந்தால் எப்படி மற்றவர்களிடத்தில் கொடுக்க மனம் வரும்? அதனால் தான் அதனை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. சரி இனி டிப்ஸை பார்ப்போம். இப்படி சீப்பை சுத்தம் செய்ய சோம்பேறித்தனம் படுபவர்கள் சுலபமான இந்த வழி முறையை கையாள பார்க்கலாம்.

- Advertisement -

உங்களுடைய சீப்புகளை போட்டு வைக்க ஒரு பெரிய டப் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொதித்த தண்ணீரை ஊற்றி கொள்ளவும். அந்த நீரில் எலுமிச்சைச்சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சீப்புகளை போட்டு ஊற வையுங்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சோப்பு அல்லது டிடர்ஜெண்ட் லிக்விட், பவுடர் போன்ற ஏதேனும் ஒன்றை சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள்.

hot-water

ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதற்கு பிறகு லேசாக அந்த சோப்பிலேயே அலசி விட்டு எடுத்தால் அழுக்குகள், தூசிகள் நீங்கி புத்தம் புதியது போல் பளபளன்னு மின்னும். நாம் பிரஷ் அல்லது கை வைத்து எதையுமே செய்ய தேவையில்லை. இப்படி செய்தாலே சீப்பில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகளும் நீங்கி விடும். அதற்குப் பிறகு அதனை தண்ணீர் இன்றி உலரவிட்டு எடுத்து வைத்து விடலாம்.

comb

வாரம் ஒரு முறை இது போல் செய்து விட்டால் போதும். சீப்பு எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். ஒருவர் பயன்படுத்திய சீப்பு எல்லோரும் பயன்படுத்தினால் பொடுகு தொல்லை, பேன் தொல்லை போன்றவையும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதற்காக எல்லா நேரத்திலும் தனித்தனியாக நம்மால் சீப்பை பயன்படுத்த முடியாது. அதனால் எப்போதும் சீப்பை சுத்தமாக வைத்திருப்பது ஒன்று தான் நமக்கு வழி.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருளோட சத்து உங்கள் வீட்டு பூச்செடிகளை தாறுமாறாக பூக்கள் பூக்கச் செய்யும் தெரியுமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.