இந்த 1 பொருளோட சத்து உங்கள் வீட்டு பூச்செடிகளை தாறுமாறாக பூக்கள் பூக்கச் செய்யும் தெரியுமா?

flower-plants

எல்லோருக்குமே பூச்செடிகளை வளர்ப்பது மிகவும் விருப்பமான ஒன்று தான். புதிதாக செடி வளர்ப்பவர்கள் கூட முதலாவதாக தேர்ந்தெடுப்பது பூச்செடியை தான். குழந்தைகள் கூட பூச்செடிகளை வளர்க்க அதிகமாக விரும்புவதாக கூறப்படுகிறது. நாம் வைத்த பூச்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவு என்பதே கிடையாது. அத்தகைய பூச்செடிகள் நிறைய பூக்களை கொத்துக் கொத்தாக தாறுமாறாக பூக்க செய்ய தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் கொடுப்பது அவசியமாகும்.

flower-garden

இந்த 1 பொருளில் பூச்செடிகளுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்து உள்ளது. அந்த ஒரு பொருள் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். பூச்செடிகள் அவ்வளவு எளிதாக நிறைய பூக்களை கொடுத்து விடுவதில்லை. ரோஜா, மல்லி, முல்லை, நித்தியமல்லி, கனகாம்பரம், டிசம்பர், ஜாதி மல்லி என்று எந்த வகையான பூச்செடி ஆக இருந்தாலும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தி ஊட்டசத்து கொடுத்தால் போதும். தாறுமாறாக பூக்களை வாரி வழங்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை நாம் செடிகளின் வேர் பகுதிக்கு மட்டுமல்லாமல், மொத்த செடிகளுக்கும் ஸ்பிரே செய்து ஊட்டச்சத்தை தாராளமாக கொடுக்கலாம். அந்தப் பொருள் வேற எதுவும் இல்லைங்க. நாம் எல்லோரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கில் இருக்கும் பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் செடிகள் நன்கு செழிப்பாக வளர்வதற்கு துணை புரிகின்றன. அதிலும் குறிப்பாக பூச்செடிகள் பெரும்பாலும் சந்திக்கும் இலை கருகல், மொட்டுக்கள் உதிர்வது, நிறம் மாறுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

potato-urulai

உருளைக்கிழங்கு பூக்களின் நிறத்தை அடர்த்தியாகவும், பூக்கள் பெரிது பெரிதாக பூக்கவும் உதவியாக இருக்கும். அதனை எப்படி ஊட்டசத்தாக பயன்படுத்துவது? என்பதை பார்ப்போம். ஒரு பெரிய உருளைக்கிழங்கை முழுவதுமாக அப்படியே சீவி கொள்ளலாம். அல்லது உருளைக் கிழங்குகளின் தோலை மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய விருப்பம் தான். எடுத்துக் கொண்டுள்ள உருளைக்கிழங்கை அரை லிட்டர் அளவிற்கு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு கொதித்து நுரை வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

- Advertisement -

உருளைக் கிழங்கில் இருக்கும் சத்துக்கள் அந்த தண்ணீரில் சேர்ந்திருக்கும். இந்த தண்ணீர் நன்கு ஆறியவுடன் பாதியாக வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள தண்ணீரை அப்படியே அதன் சக்கைகள் உடன் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வேர் பகுதிக்கும், உங்கள் ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் தண்ணீரை செடிகளுக்கும் ஊட்டசத்தாக கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த செடிக்கு சென்று சேர்வதால் செடிகளின் செழிப்புக்கு உத்தரவாதம் அளிக்கலாம்.

multi-color-roses

இந்த முறையை குறிப்பாக பூச்செடிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் அந்தப் பூ செடியில் நிறைய பூக்களும் பசுமையாக கொத்துகொத்தாக தாறுமாறாக பூக்கள் பூக்க துவங்கி விடும். ரோஜா, மல்லி போன்ற செடிகள் பெரிது பெரிதாக பூக்களைக் கொடுக்கும். இந்த ஒரு பொருளை வைத்தே பூச்செடிகளை நாம் எளிதாக பராமரித்து விடலாம். இதனை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கூட செய்து கொள்ளலாம் நல்ல பலன் தரும்.

இதையும் படிக்கலாமே
மொட்டை மாடி தோட்டத்தில் புடலங்காய் செடியை இத்தனை சுலபமாக வளர்க்க முடியுமா? செழிப்பான புடலங்காயை அறுவடை செய்ய உங்களுக்கான சுலபமான டிப்ஸ்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.