அழகான தேவதை போன்ற பளிச்சிடும் சருமம் பெற இந்த நைட் க்ரீமை மட்டும் தொடர்ந்து பயன்படுத்திப்பாருங்கள்

face
- Advertisement -

பொதுவாகவே நமது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நமது முகத்தில் பலவித பிரச்சினைகள் உண்டாக காரணமாக அமைகிறது. இதன் காரணமாகத் தான் முகத்தில் சிறிய கோடுகள், சரும வறட்சி, முகத்தில் கருப்பு திட்டுகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தினமும் நமது முகத்தை சரியாக பராமரிக்க வேண்டும். இதற்கு சரியான கால அவகாசம் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். இருந்தாலும் சற்று நேர அவகாசம் கொடுத்து முகத்தை நாம் பராமரித்து வருவது மிகவும் அவசியமாகும். அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றாலும் இரவு படுக்கும் முன்பாக இதுபோன்ற ஃபேஸ் பேக்குகளை முகத்தில் போட்டுக் கொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும். வாருங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள சில ஃபேஸ் பேக் குறிப்புகளை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஃபேஸ்பேக்: 1
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கடலை மாவு பேஸ் பேக் தயாராகிவிட்டது.

- Advertisement -

இரவு தூங்கப்போகும் முன் முகத்தை நன்றாக கழுவிய பின்னர், இந்த ஃபேஸ் பைக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பிறகு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வர முகம் பளிச்சென்று மாறிவிடும்.

ஃபேஸ்பேக்: 2
ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை சுத்தம் செய்த பிறகு, முகத்தில் ஃபேஸ் பேக்கை அப்ளை செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். உங்கள் முகம் பளிச்சென்று சுத்தமாக மாறிவிடும்.

- Advertisement -

ஃபேஸ் பேக்: 3
இரண்டு ஸ்பூன் பச்சை பயிறை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக்: 4
2 ஸ்பூன் தேங்காய் துருவலை கடாயில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த தேங்காய் துருவலுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்து ஊற விட வேண்டும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சரும வறட்சி முழுவதுமாக மறைந்து விடும்.

- Advertisement -