உங்கள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், நீங்கள் செய்யும் வேலைகளை சுலபமாக்கவும் இந்த எளிய குறிப்புகளை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

tips
- Advertisement -

தினம் தோறும் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கு தங்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது முடியாமல் போய்விடும். அவ்வாறு அவர்கள் செய்யும் வேலைகள் அவ்வளவு அதிகமாக இருக்கிறது. காலையில் எழுந்து டீ போடுவது முதல் இரவு உணவு சமைப்பது வரை அவர்களுக்கான வேலை மிகவும் அதிகம் தான். ஆனால் இவ்வாறான வேலைகளின் பொழுது, அவர்கள் வீட்டை சுத்தம் செய்வதும் சேர்ந்து விட்டால் அன்றைய தினம் அவ்வளவு தான். இவ்வாறு நேரத்தை அதிகரிக்கும் வேலைகளை எப்படி சுலபமாக மாற்ற வேண்டும் என்பதையும், உங்களுக்கு பயனுள்ள சில எளிய குறிப்புகளையும் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு : 1
பெண்கள் எப்பொழுதும் புடவை கட்டும் பொழுது தங்கள் முந்தானைக்கு பின் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறு பின் போடுவது சில நேரங்களில் அவர்களின் சேலையை கிழித்து விடுகிறது. எனவே இந்த பின்னில் சிறிதளவுள்ள ஒரு மணியை கோர்த்து விட்டு, அதன் மீது லேசாக நெயில் பாலிஷ் தடவி விட்டால் போதும். அதனை மீண்டும் சேலையில் பயன்படுத்தும் பொழுது இவ்வாறு சேலை கிழியாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
சமையலறையில் வெகுநாட்களாக வைத்திருக்கும் பருப்பு வகைகளில் விரைவாகவே வண்டுகள் வர ஆரம்பிக்கும். இவ்வாறு தானியங்களில் வண்டுகள் வராமல் இருக்க அவற்றில் ஒரு பிரியாணி இலை, இரண்டு கிராம்பு சேர்த்து கலந்து விட்டால் போதும். எறும்பு தொல்லை, வண்டு தொல்லை இருக்காது.

குறிப்பு: 3
என்னதான் தினமும் சமையல் செய்தாலும் பெண்களுக்கு சில சவாலான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறு பூண்டு உரிக்கும்பொழுது சிலருக்கு மநகத்தில் காயம் ஏற்பட ஆரம்பிக்கும். விரைவாக பூண்டை உரிக்கவும் முடியாது. இதனை சுலபமாக செய்வதற்க்கு பயன்படுத்தும் பின்னை எடுத்துக் கொண்டு, அதன் பின்புறத்தில் வட்டமான துளையினை பூண்டின் தலைப்பகுதியில் வைத்து அழுத்தி உரித்தால் பூண்டின் தொலை எளிமையாக உரிக்க முடியும்.

- Advertisement -

குறிப்பு: 4
சமையல் செய்யும் பொழுது அடுப்பின் மீது பலவித கறைகள் படிந்து இருக்கும். அதிலும் அதிகமாக விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் தான் இருக்கும். இவற்றை என்னதான் சோப்பு போட்டு செய்தாலும் எளிதில் சுத்தம் ஆகாது. இவற்றை சுத்தம் செய்வதற்கு நாம் தினமும் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுப்பின் மீது முழுவதுமாக தடவிவிட்டு, பிரஷ் வைத்து தேய்த்து விட்டு, பிறகு சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர் அதில் உள்ள கறைகள் அனைத்தும் முழுவதுமாக மறைந்து விடும்.

குறிப்பு: 5
மறுநாள் சமைப்பதற்காக பருப்பு வகைகளை ஊறவைக்காமல் மறந்துவிட்டால் திடீரென என்ன சமைப்பது என்ற குழப்பம் வந்துவிடும். இது போன்ற நேரங்களில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்ணீர் நன்றாக கொதித்ததும், இந்த பட்டாணியின் மீது சுடு தண்ணீரை ஊற்றி விட வேண்டும். சூடு ஆறும் வரை அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பின் பட்டாணியை குக்கரில் சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை வேக வைத்தால் சுலபமாக வெந்துவிடும்.

- Advertisement -