உங்கள் சமையலறை வேலையை சுலபமாக்கி, சுத்தத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் இந்த 6 குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், ரொம்பவே உபயோகமாக இருக்கும்!

cutter-with-knife-kitchen
- Advertisement -

பொதுவாக சமையல் அறையில் நாம் சில விஷயங்களை சிரமப்பட்டு செய்து கொண்டிருப்போம். வெங்காயம் உரிப்பது, பூண்டு உரிப்பது கூட சிரமமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் இது போல குட்டி குட்டி டிப்ஸ்களை தெரிந்து வைத்திருந்தால், மிகவும் உபயோகமாக இருக்கும். இல்லதரசங்களுக்கு சமையல் அறையின் சுத்தத்திற்காகவும், நல்ல ஒரு ஆரோக்கியத்திற்காகவும் தேவையான எளிய குறிப்புகள் இதோ இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்.

குறிப்பு 1:
சின்ன வெங்காயம் தோல் உரிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கும். முதலில் அதன் தலைப்பகுதி மற்றும் வால் பகுதியை நீக்கிவிட்டு சிறிதளவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து இதை பிசைந்தாலே தோல் சுலபமாக உரிந்து வந்துவிடும். இதற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

குறிப்பு 2:
இட்லி, தோசைக்கு மாவு அரைப்பவர்கள் எப்பொழுதும் ஐஸ் வாட்டர் பயன்படுத்தி அரைப்பது மிக்ஸிக்கு நல்லது. இது பலருக்கு தெரிந்திருக்கும் ஆனால் ஊற வைக்கும் பொழுதும் ஐஸ் வாட்டர் சேர்த்து ஊற வைத்து பாருங்கள், ரொம்பவும் உபரியான மாவு கிடைக்கும். மேலும் சீக்கிரம் புளிக்காமலும் இருக்கும். மிக்ஸி சூடாவதால் சீக்கிரம் புளித்து விடும். இப்படி ட்ரை பண்ணி பாருங்க சரியாக வரும்.

குறிப்பு 3:
சமையலறையில் அடிக்கடி எறும்பு நடமாட்டம் இருந்தால் எறும்பு தொந்தரவை சீக்கிரம் ஒழிக்க இரண்டு பட்டை, நாலைந்து கிராம்புகள் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை நைஸ் ஆக பவுடர் போல பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எறும்பு வரும் இடங்களில் நீங்கள் தூவி விட்டால் போதும், ஒரு எறும்பு கூட அந்த அந்த இடத்தில் இனி எப்போதும் வராது.

- Advertisement -

குறிப்பு 4:
ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் போன்றவற்றை வாங்கி வைக்கும் போது அது சில நாட்களிலேயே கட்டிபட்டு விடும். இதற்கு ஒரு சிறிய அளவிலான மெல்லிய காட்டன் துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் அரிசி போட்டு இறுக்கமாக முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அந்த பாட்டிலில் போட்டு வைத்தால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் கட்டி படாமல் அப்படியே இருக்கும். ஒரு பாலிதீன் கவர் போட்டு அதன் மேல் மூடியை போட்டு இறுக்கமாக மூடி பாருங்கள், காற்று கொஞ்சம் கூட போகாமல் இருக்கும்.

குறிப்பு 5:
சமையலறையில் நீங்கள் அடிக்கடி குக்கர் பயன்படுத்த வேண்டி இருக்கும். இப்படி குக்கர் பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து தண்ணீர் விசில் வழியாக வந்து கசிந்தால் இதை ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் குக்கரில் வைக்க வேண்டிய பொருட்களை வைத்துவிட்டு, ஒரு சிறிய அளவிலான கிண்ணத்தை அதன் மீது வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது அந்த கிண்ணத்திற்குள் தண்ணீர் போகுமே தவிர விசில் வரை மேலே எழும்பி கசியாது ட்ரை பண்ணி பாருங்க.

குறிப்பு 6:
கிச்சன் மேடையை சுத்தம் செய்யும் பொழுது இந்த ஸ்பிரே பயன்படுத்தி பாருங்கள், ஒரு கரப்பான் பூச்சி, பல்லிகள் கூட சமையலறையில் இனி சுற்றாது. இரண்டு ஊதுபத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் கருப்பு நிற துகள்களை கைகளால் உருவி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு கற்பூரத்தை உடைத்து சேருங்கள். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்கள். இதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்பிரேயை கொண்டு நீங்கள் கிச்சன் மேடையை துடைத்தால் சமையல் அறை தெய்வீகமாக இருக்கும்.

- Advertisement -