சமையலறை எப்போதும் கண்ணாடி போல பளிச்சென்று சுத்தமாக இருக்கணுமா? அதே சமயம் சமயலறையில் உள்ள பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பணத்தை மிச்சப்படுத்தணுமா? அப்போ இந்த புது விதமான குறிப்புகளை பின்பற்றுங்கள்:

samayal arai
- Advertisement -

ஒரு வீட்டில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடங்கள் முதலில் பூஜை அறை இரண்டாவதாக சமையலறை மூன்றாவதாக குளியலறை இந்த மூன்று இடங்களையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தோம் என்றால் எப்போதும் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிலவிக் கொண்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் சேமிப்பும் சிக்கனமும் குடும்பத்திற்கு மிகவும் அவசியம். இவை இரண்டையும் எவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ள இப்பதிவினுள் செல்லுங்கள்.

kitchen-cleaning

முதலில் சமையலறையை எவ்வாறு தூய்மையாக வைத்திருப்பது என்று பார்ப்போம். சிறிய சிறிய விஷயங்களை நாம் செய்வதன் மூலம் நமது சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்கும். பார்க்கும்போதே நமக்கும் நிறைவாக இருக்கும். நமக்கு சமையலறையில் பெரும் பிரச்சனையாக இருப்பது நாம் சமைப்பதினால் உண்டாகும் எண்ணை பிசுக்கு. இதனை நாம் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

டிப்ஸ் 1
சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரத்தை வெறும் தரையில் வைக்காமல் அதன் அடியில் ஒரு சிறிய தட்டை வைத்து வையுங்கள். எண்ணை சிந்தினாலும் அது தரையில் படாமல் தட்டிலேயே இருக்கும். அடுத்தபடியாக சமைத்து முடித்த பின்னர் அடுப்பை சுற்றி உள்ள இடத்தையும் ஒரு ஈரத் துணியை வைத்துத் துடைத்து விட்டால் அந்த இடம் சுத்தமாக இருக்கும்.

oil pulling

டிப்ஸ் 2
சுத்தம் செய்வதற்காக நாம் பணம் செலவழித்து லிக்விட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே அதனை சுலபமாக செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் டீ தூள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதனை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை நமது சமையலறையில் அடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் ஸ்பிரே செய்து துடைத்தால் உடனே சுத்தமாகிவிடும். இதனை பயன்படுத்தி பாருங்கள் இதற்காக தனியாக செலவு ஏதும் செய்ய வேண்டாம். இந்த ஸ்பிரேவை வைத்து பிரிட்ஜ்யையும் தூய்மை செய்யலாம்.

- Advertisement -

டிப்ஸ் 3
எலுமிச்சை பழத்தை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் அது வீணாகும் நிலைமை ஏற்படும். ஆனால் ஒரு சிறிய காகித துண்டில் ஒன்று ஒன்றாக தனித்தனியே காகிதத்தில் சுருட்டி வைத்தோம் என்றால் ஒரு மாதம் வரை வைத்திருந்தாலும் நன்றாக இருக்கும்.

lemon

டிப்ஸ் 4
முட்டை வேக வைக்கும் பொழுது நிறைய நேரங்களில் முட்டை உடைந்து அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நீரில் சிதறிவிடும். இதனை தவிர்க்க முட்டை வேக வைக்கும் பொழுது அதில் சிறிதளவு உப்பு அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

டிப்ஸ் 5
பொதுவாக நாம் முட்டை வைக்கும் டிரேவில் எப்போதும் முட்டையின் தட்டையான அகலமான பகுதி கீழேயும் நுனிப்பகுதி மேலேயும் இருக்குமாறு தான் வைப்போம். ஆனால் அவ்வாறு செய்யாமல் முட்டையின் நுனிப் பகுதி ட்ரேவில் நுழையும் மாறும் தட்டையான பகுதி மேல் நோக்கியும் வைத்தோம் என்றால் முட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். முட்டையின் கரு நடுவில் இருக்குமாறு இருப்பதால் முட்டை சீக்கிரம் வீணாகாமல் நிறைய நாட்கள் நன்றாக இருக்கும்.

egg

டிப்ஸ் 6
பொதுவாக சமையலுக்காக வாங்கி வைக்கும் கேரட் சில நாட்களில் அழுக ஆரம்பித்துவிடும். கேரட் சீக்கிரம் அழுகி விடாமல் இருக்க நாம் கேரட்டை பிரிட்ஜில் வைக்கும் முன்னரே அதன் மேல் பகுதியையும் நுனி பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் அதிக நாட்கள் வீணாகாமல் நன்றாக இருக்கும்.

இந்த சிறிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் சமையலறையை தூய்மையாகவும் பணத்தை மிச்சப்படுத்தியும் பயன்பெறுங்கள்.

- Advertisement -