5 நிமிஷத்தில் எதுவும் சேர்க்காமல் மோர்க்குழம்பு நொடியில் ரெடி பண்ணிடலாம். எப்டின்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

mor-kuzhambu
- Advertisement -

மோர் குழம்பு என்றாலே ஈசி தான். அதிலும் ரொம்ப ரொம்ப சுலபமாக 5 நிமிஷத்துல செய்வது எப்படி? ஒரு சிலருக்கு இதை அரச்சு ஊத்திட்டு, அதை அரச்சு ஊத்திட்டு இருந்தால் பிடிக்காது. நேரமே இல்லை என்ற சமயத்தில் இது போல் டக்குனு நாலு தேங்காய் கட் பண்ணி அரச்சு ஊற்றி செஞ்சிரலாம். சாதாரண மோரை விட இந்த மோர் குழம்பு அருமையான சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

plain-mor-kuzhambu

இந்த மோர் குழம்பு செய்ய பெரிய பத்தை தேங்காய் ஒன்று, ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சி, 2 கப் தயிர், 2 பச்சைமிளகாய், அரை டீஸ்பூன் சீரகம் இருந்தாலே போதும். அவசரமா செய்ய இந்த மோர் குழம்பு தான் நமக்கு உதவியாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்ய தினமும் என்ன செய்வது? என்கிற போராட்டத்துடன் இருப்பார்கள்.

- Advertisement -

சாம்பார், காரக்குழம்பு போன்றவை மதிய நேரத்தில் சாப்பிடும் பொழுது அலுத்துப் போனது போல் இருக்கும். கலவை சாதம் பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் பிடிக்கும். பெரியவர்களுக்கு அவை அந்த அளவிற்கு பிடிப்பதில்லை. இது போல் மோர் குழம்பு ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். காலையில் எழுந்து செய்யவும் சுலபமாக இருக்கும்.

plain-mor-kuzhambu1

2 கப் தயிரை மிக்ஸியில் ஒரே ஒரு சுத்து சுத்தி இறக்கிடுங்க. அதை அப்படியே அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து லேசாக சூடாக்க வேண்டும். பின்னர் தேங்காய்களை நறுக்கிக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் சீரகம், தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், 2 பச்சை மிளகாய், 2 துண்டு இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொதித்துக் கொண்டிருக்கும் மோரில் இந்த கலவையை சேர்த்து ஒரு மூன்று நிமிடத்திற்கு நன்றாக மேலும் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் தாளிக்கத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தாளித்துக் கொட்டினால் மோர் குழம்பு ரெடி. ரொம்ப ரொம்ப ஈஸியா சட்டென ரெண்டு நிமிஷத்தில் கூட இந்த குழம்பை தயார் செய்து விடலாம்.

plain-mor-kuzhambu2

தாளிக்க தாளிப்பு கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு, கருவேப்பிலை, ஒரே ஒரு வரமிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து மோர்க் குழம்பில் கொட்டவும். தேவைப்பட்டால் மல்லி தழையை நறுக்கி சேர்த்து கொள்ளலாம். அவ்வளவுதாங்க இது கூட தொட்டுக்க காரசாரமா ஏதாவது ஒரு தொக்கு வச்சா செம்மையா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -

baby-eating4

அவசரமான சமயத்தில் அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள் இது போன்ற சிம்பிளாக செய்யக்கூடிய டிப்ஸ்களை தெரிந்து வைத்திருந்தால் ரொம்ப உபயோகமா இருக்கும். இதுக்கு நாங்க தயிர் சாதமே சாப்பிட்டு விடலாமே என்று பலரும் கூறலாம். நாவிற்கு தயிர்சாதம் தரும் ருசியை விட, மோர் குழம்பு ருசி அலாதியானது. நீங்கள் சுவைத்து பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

mor-kuzhambu1

மோர் குழம்பு வெண்டைக்காய் போன்ற சில காய்கறி வகைகளை சேர்த்து செய்வது வழக்கம். அதுபோல் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும். ஆனால் நேரம் இல்லாமல் இருப்பவர்கள் காய்கறிகளைச் சேர்க்காமல் எதையும் ஊற வைத்து அரைக்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நொடியில் செய்து விடலாம் என்பதால் இந்த டிஷ் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
ஒரே மாதிரியான வடை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? இப்படி ஒரு தெய்வீகமான வடையை முயற்சி செய்து பாருங்கள்! அப்புறம் அடிக்கடி சுட ஆரம்பிச்சிடுவீங்க.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -