வெயில் காலத்தில் சிக்கனை தவிர்த்து மட்டன் அரைக்கிலோ வாங்கினாலும் இப்படி சுக்கா செய்து பாருங்கள்! ரசம், சாம்பார் இருந்தாலே ருசிக்க ருசிக்க சாப்பிட்டு விடலாம்.

mutton-sukka2
- Advertisement -

வெயில் காலம் வந்து விட்டாலே உடல் சூடு அதிகரிக்கத் துவங்கி விடும். ஏற்கனவே உடல் உஷ்ணத்தை குறைத்துக் கொள்ளாமல் இருக்கும் பொழுது பல்வேறு நோய்களுக்கு எதிராக நாம் பாதை அமைத்துக் கொடுக்கிறோம். இதனால் இந்த சமயத்தில் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட நாட்டுக் கோழி வாங்கி சமைப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக அரை கிலோ மட்டன் வாங்கினாலும், இப்படி ருசிக்க ருசிக்க சுக்கா செய்து ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! மட்டன் சுக்கா எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
மட்டன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2 அல்லது சின்ன வெங்காயம் – 15, இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – ஐந்து, தனியா விதை – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பட்டை – இரண்டு துண்டு, கிராம்பு – 2, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

மட்டன் சுக்கா செய்முறை விளக்கம்:
முதலில் அரை கிலோ மட்டனை நன்கு நாலைந்து முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எல்லாம் வடிகட்டிய உடன் குக்கரில் சேர்த்து கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, கறிக்கு தேவையான கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு மட்டும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 10 விசில் நன்கு விட்டு எடுக்க வேண்டும். நீங்கள் வாங்கும் மட்டன் மற்றும் உங்கள் குக்கரின் தரத்தைப் பொறுத்து இதன் எண்ணிக்கை மாறுபடுகிறது. சில குக்கரில் 7 விசில் விட்டு எடுத்தாலே நன்கு வெந்துவிடும். ஆனால் சில குக்கர் 10 விசில் விட்டும் வெந்து போயிருக்காது. எனவே உங்களுடைய குக்கருக்கு ஏற்ப மட்டனை பூ போல வெந்து போகும் அளவிற்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதிலேயே பாதி தண்ணீர் வற்றி விடும்.

அதன் பிறகு அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு வெறும் வாணலியில் இட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். முதலில் வெறும் வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் வர மிளகாயை இலேசாக சூடேற வறுத்துக் கொள்ளுங்கள். பின்பு மிளகு, சீரகம், தனியா, சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை அடுத்தடுத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின்படி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து லேசாக பிரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். மசாலாக்கள் எல்லாம் சூடேற வறுபட்டதும் அதனை ஆற விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது மீதமிருக்கும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இவற்றின் பச்சை வாசம் போக, வெங்காயம் சுருள வதங்கியதும் நீங்கள் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். நீர் வற்றி மட்டன் சுக்கா போல நன்கு திரண்டு வரும் போது நெய் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த மட்டன் சுக்கா நீங்களும் இதே முறையில் முயற்சித்துப் பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -