வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக, தானாகவே சரியாக, 21 நாள், 21 சுற்று, 1 வரி மந்திரம் போதுமே!

one-rupee

வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாமே சுமூகமாக முடிந்துவிட வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமே கிடையாது. எல்லா வகையான பிரச்சனைக்கும் உடனடி தீர்வு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். இருப்பினும் நம்முடைய சாஸ்திரத்தில் சில வழிபாட்டு முறைகள் மிகவும் வலிமையானதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நம்முடைய துயரங்களை போக்கக்கூடிய விநாயகர் வழிபாட்டைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நமக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டமாக இருந்தாலும், அந்த கஷ்டத்தை உடனடியாக போக்கக்கூடிய சக்தி கணபதிக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.

vinayagar-abishegam

விநாயகருக்கு பல முகங்கள் இருக்கலாம். பல வகைப்பட்ட மந்திரங்கள் இருக்கலாம். பல வகையான வழிபாட்டு முறைகள் இருக்கலாம். இருப்பினும் எல்லா வகையான பிரச்சனையையும் இறைவனின் பாதங்களில் வைத்துவிட்டு, அந்த பிரச்சினைகள் சுமூகமாக முடிய வேண்டும் என்று பொதுவாக ஒரு வேண்டுதலை வைப்பதாக இருந்தால், இந்த முறைப்படி உங்களுடைய வழிபாட்டை செய்யலாம். மிகவும் சுலபமாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள எளிமையான விநாயகர் வழிபாடு இது.

இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் இருந்தும் செய்யலாம். கோவில்களுக்கு சென்றும் செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். விநாயகர் எப்போதுமே எளிமையான வழிபாட்டை விரும்புபவர். உங்களுடைய வீட்டில் விநாயகரின் திருவுருவப்படம் இருந்தாலும், விநாயகரின் சிலை இருந்தாலும் அதை ஒரு மேஜையின் மேல் எடுத்து வைத்துவிடுங்கள். அந்த மேஜையைச் சுற்றி வரும் அளவிற்கு, உங்களுடைய வீட்டின் நடுப் பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள்.

pillaiyar1

ஏனென்றால், விநாயகரை நீங்கள் 21 முறை வலம் வரப் போகிறீர்கள். விநாயகரை வணங்கி 21 நாட்கள், 21 முறை வலம் வந்து, இந்த மந்திரத்தை 21 முறை உச்சரித்தாலே போதும். உங்களுக்கான துயர் துடைக்கும் விநாயகரின் மந்திரம் இதோ!

- Advertisement -

‘ஓம் ஸுமுகாய நமஹ!’

vinayaga

இது ஒருவரை மந்திரம்தான். கோயிலுக்கு சென்றும், இந்த மந்திரத்தை உச்சரித்து, விநாயகரின் பிரகாரத்தை 21 முறை சுற்றி வருவது மிகவும் நல்லது. உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது சுமூகமாக முடிய வேண்டும் என்று, விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு, ஒரு ரூபாய் காணிக்கையை வைத்து விட்டுப் உங்களுடைய வேண்டுதலை வைத்தாலும் கூட, கட்டாயம் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பதில் சந்தேகமே கிடையாது.

one rupee

புதியதாக ஏதாவது ஒரு வேலையை தொடங்கப் போகிறீர்கள் அல்லது இன்டர்வியூக்கு செல்ல வேண்டும், அல்லது தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியம் நடக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத நோய் தீர வேண்டும். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய வேண்டுதல்கள், கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றாலும், அந்த வேலையை தொடங்குவதற்கு முன்பாக, 21 நாட்களுக்கு முன்பே இந்த பரிகாரத்தை நீங்கள் தொடங்கி விடுங்கள்.

maragatha-vinayagar

21 நாட்கள் இந்த வழிபாட்டையும், இந்த மந்திரத்தையும் உச்சரித்து விட்டு உங்களது வேலையை செய்யத் தொடங்கி பாருங்கள். (21 நாட்களுக்குப் பிறகும், இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, விநாயகர் வழிபாடு செய்யலாம். வாழ்நாள் முழுவதும் உங்களுடைய பிரச்சினைகள் சுமூகமாக தீர, உங்கள் மனதை உறுதிபடுத்தும் சக்தியும் இந்த மந்திரத்திற்கு உண்டு.)

Vinayagar-1

பிரச்சனைகள் வரும், ஆனால் அந்த பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வை, அந்த விநாயகப் பெருமானே காட்டி விடுவார், பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்த்து விடுவார், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் வறுமை நீங்க, முதல் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.