நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் வறுமை நீங்க, முதல் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?

maheshwari-amma
- Advertisement -

ஒன்பது நாட்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப் படக்கூடிய பண்டிகை தான் இந்த நவராத்திரி கொலு. பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அம்பாளை நினைத்து வழிபடும் பண்டிகை என்பதால், இந்த நவராத்திரி வழிபாடானது முழுக்க முழுக்க பெண்களுக்கே உரிய ஒரு பண்டிகை என்று கூட சொல்லலாம். சிவனுக்கு ஒரு ராத்திரி அது ‘சிவராத்திரி’. அம்பாளுக்காக கொண்டாடப்படும் ராத்திரி நவராத்திரி என்று சொல்லுவார்கள். மும்மூர்த்திகளின் முப்பெரும் தேவியரான மூன்று தேவியரையும் போற்றும் வகையில் இந்த நவராத்திரி தினம் கொண்டாடப்படுகின்றது. (மலைமகள், அலைமகள், கலைமகள்).

Navaratri

இந்த வருட நவராத்திரி, ஐப்பசி 1 தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நவராத்திரியின் வழிபாட்டு முறையை பெண்கள் அவரவருடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி செய்ய வேண்டும்? முதல் நாள் வழிபாடு, இரண்டாம் நாள் வழிபாடு, இப்படியாக ஒன்பது நாட்களும் எந்த முறைப்படி வழிபாடு செய்தால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இருந்தால், அந்த முறைப்படி உங்கள் வீட்டு பாரம்பரியப்படி கொலு வைத்து, இந்த நவராத்திரி பூஜையை தொடங்கலாம். பாரம்பரியமாக உங்களுடைய வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எனும் பட்சத்தில், உங்களுடைய வீட்டிலிருப்பவர்கள் சம்மதத்தோடு நீங்கள் தாராளமாக கொலு வைக்கலாம்.

kamatchi-amman

கொலுவை உங்களுடைய வீட்டில் ஆரம்பிப்பதற்கு முன்பாக, அம்பாளை நினைத்து மனதார வேண்டிக்கொண்டு, ‘எங்களுடைய வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. இருப்பினும் நவராத்திரி வழிபாட்டை கொலுவைத்து வழிபடுவதற்கு அருளாசியை அம்பாள் வழங்க வேண்டும்.’ என்று வேண்டிக்கொண்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பின்பு உங்களுடைய வீட்டிலும் கொலு வைக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் எல்லோராலும் கொலுவைத்து நவராத்திரி கொண்டாட முடியுமா என்பது சந்தேகம்தான்! நம்முடைய பொருளாதார சூழ்நிலை, நமக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு இவைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி பண்டிகையை கொலு வைக்காமலும், இந்த நவராத்திரி தினத்தை நிறைவாக கொண்டாட முடியும். அந்த வரிசையில் முதல் நாள் நவராத்திரியை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி கொண்டாடுவது? தெரிந்து கொள்ளலாமா?

durga

நவராத்திரியின் முதல் 3நாள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் நவராத்திரி தினத்தில் வழிபட வேண்டிய அம்மனின் பெயர் ‘மகேஸ்வரி’. மகேஸ்வரி அம்மனை நினைத்து தான் முதல்நாள் நவராத்திரியை தொடங்க வேண்டும். முதல் நாள் நவராத்திரி தினத்தில் உங்களுடைய வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பி கோலம் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

malligai poo

மாலையில் உங்களுடைய வீட்டில் இருக்கும் அம்மனுக்கு மல்லிகைப்பூ, வில்வ இலையால் அலங்காரம் செய்து விட்டு, தீபம் ஏற்றி வைத்து விட்டு, வெண்பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து, வழிபாடு செய்ய வேண்டும். நவராத்திரி கொலு என்றாலே சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் மிகவும் விசேஷமானது.

vilvam1

ஆகவே, இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் செய்யும் போது, முடிந்தால் உங்கள் வீட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உங்கள் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து உங்களால் முடிந்த தாம்பூலத்தை அவர்களுக்கு தானமாக கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.

valaiyal

குறிப்பாக முதல் நாள் நவராத்திரி தினத்தில், பச்சை நிறம் மிகவும் உகந்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால், உங்களுடைய வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு, கன்னிப் பெண்களுக்கும், பச்சை நிறத்தில் வளையல் அல்லது பச்சை நிற ரவிக்கை துணி இப்படிப்பட்ட பொருட்களை தாம்பூலத்தில் வைத்து கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். இந்த தாம் பலத்தோடு அம்மனுக்கு படைத்த நெய்வேத்தியமான வெண் பொங்கலையும் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

pongal

உங்களுடைய வீட்டில் இருப்பவர்களும் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மேலும் சிறப்பு. உங்களால் வளையல், ரவிக்கைத்துணி என்று எதையுமே தானமாக கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு பூ, நெற்றியில் இட்டுக்கொள்ள குங்குமம் மட்டும் கொடுத்தால் கூட போதும்.

kolam4

இந்த முதல் நாள் வழிபாட்டை நாம் நிறைவாக செய்து முடித்தால், நம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு முதல் நாள் வழிபாடு மிகவும் சிறப்பானது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை, இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதுமே! உங்களுடைய பாவங்களில் பாதி குறைந்து விடும். புரட்டாசி சனி மட்டுமல்ல, புரட்டாசி புதனுக்கு எத்தனை மகத்துவம் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -