வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ள இந்த எளிய அழகுக் குறிப்புகளை முறையாக பயன்படுத்தி வாருங்கள்

face
- Advertisement -

ஏப்ரல், மே மாதங்கள் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இதனால் தான் இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுவிடுகின்றனர். ஆனால் வேலைக்கு செல்பவர்கள் நிச்சயமாக வெளியில் வந்துதானே ஆக வேண்டும். இவ்வாறு வெளியில் சென்று வந்த உடனே வெயிலின் தாக்கம் முகத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. தோலின் நிறம் கருமையாகவும் பள பளப்பு இல்லாமலும் மாறி விடுகிறது. எப்போதும் வீட்டிலேயே இருந்து என்றாவது ஒருநாள் அவசரத்திற்கு வெளியில் சென்று வந்தாலும் கூட உடனடியாகவே வெயிலினால் நமது தேகம் பாதிக்கப்படுகிறது. இப்படி இந்த பாதிப்புகளை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் நமது தோலின் நிறம் நிரந்தரமாக கருமையாக மாறிவிடும். எனவே நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, வெயிலில் இருந்து சருமத்தை எவ்வாறு பராமரித்துக் கொள்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு: 1
வெளியில் சென்று வந்த உடனே முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டு, பின்னர் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியை மிக்ஸியில் பொடியாக நறுக்கி சேர்த்து, அதனை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெயிலினால் உண்டான கருமை நிறம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
இதேபோல வீட்டில் இருக்கும் பொருட்களான வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றையும் பேஸ்ட்டாக அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின்னர் முகத்தைக் கழுவ, முகத்தில் இருக்கும் கருமைகள் அனைத்தும் மறைந்து முகம் பளிச்சென்று அழகாக மாறி விடும்.

குறிப்பு: 3
ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் பயித்தம் மாவு மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து, அதன் பின்னர் 20 நிமிடம் ஆற விட்ட, பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய முகச்சுருக்கம், முகக் கருமை அனைத்தும் மறைந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு: 4
வெயிலில் சென்று வந்த உடனேயே முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு விட்டன் இ ஆயில் அல்லது அலோ வேரா ஜெல்லை கொஞ்சமாக எடுத்து முகத்தில் தடவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெயிலின் தாக்கம் சருமத்தின் வழியாக உள்ளுக்கு செல்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

குறிப்பு: 5
வெயில் காலங்களில் ஏதேனும் விசேஷங்களுக்கு வெளியூர் செல்வதாக இருந்தால், இது போன்ற நேரங்களில் சிறிதளவு கடலை மாவுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விட்டு முகத்தை கழுவிக் கொண்டால் போதும். பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்தது போன்ற முகம் பளபளப்பாக மாறிவிடும்

- Advertisement -