ஹோட்டல் டிபன் சாம்பார் வைக்க இப்படி ஒரு சுலபமான வழி உள்ளதா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சு.

tiffen-sambar1
- Advertisement -

விதவிதமாக எத்தனையோ வகைகளில் சாம்பார் வைக்கலாம். சாம்பாரில் நிறைய ரகங்கள் உள்ளது. அதில் ஹோட்டலில் வைக்க கூடிய ஒரு டிபன் சாம்பாரை மிக மிக சுலபமாக நம்முடைய வீட்டில் எப்படி வைக்கலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குக்கரில் 2 விசில் வைத்தால் போதும். வேலை முடிந்தது. சாம்பார் சுலபமாக இருபதே நிமிடத்தில் தயாராகிவிடும். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்த்திடலாம்.

sambar1

ஒரு குக்கரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் பாசிப்பருப்பு – 1/2 கப், துவரம்பருப்பு – 1/2 கப், வெந்தயம் – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், சிறிய சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 1, பழுத்த தக்காளிப் பழங்கள் – 4 சிறு துண்டுகளாக வெட்டியது, பொடியாக நறுக்கிய கேரட் – 1, பரங்கிக்காய் பொடியாக நறுக்கியது – 1 கைப்பிடி அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1 இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக போட்டு, இந்த பொருள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். 3 விசில் வரட்டும்.

- Advertisement -

குக்கர் 3 விசில் வந்ததும் பருப்பும் காயும் வெந்து குழைந்து சரியான பக்குவத்தில் நமக்குக் கிடைத்திருக்கும். பருப்பு வெந்ததும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மீண்டும் குக்கரை அடுப்பில் மீது வையுங்கள். சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு, மல்லித் தூள் – 2 ஸ்பூன், சிறிய துண்டு வெல்லம், கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளை, போட்டு 5 நிமிடம் போல சாம்பாரை நன்றாக கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

sambar2

வரமல்லி உங்கள் வீட்டில் இருக்கும் அல்லவா. அதை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அப்படியே பிரஷ்ஷாக சாம்பாரில் சேர்த்தால் சாம்பாரின் ருசி அருமையாக இருக்கும்.

- Advertisement -

இந்த சாம்பாரில் பரங்கிக்காய் சேர்த்துள்ளோம். பரங்கிக்காய் சாம்பாரில் சேர்த்தால், சாம்பார் சீக்கிரமே கட்டியாக மாறும். ஆகையால், சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை பார்த்து ஊற்றிக் கொள்ள வேண்டும். (இந்த சாம்பாரில் சேர்ந்து இருக்கும் பரங்கிக்காயும் கேரட்டும் நன்றாக வெந்து மசிந்துவிட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.)

Aravai sambar

கமகம வாசத்தோடு ஓட்டல் ஸ்டைலில் நமக்கு சாம்பார் தயார் ஆகி விட்டதல்லவா. இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி கலந்து சுட சுட பரிமாறுங்கள். அருமையான ருசியில் அட்டகாசமான ஹோட்டல் சாம்பார் தயார். யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -