எப்படி தியானம் செய்தால் எளிதில் பலனை பெறலாம் ?

0
557
dhiyanam
- விளம்பரம் -

பொதுவாக தியானத்தை இரண்டு வழிகளின் செய்யலாம். ஒன்று கண்களை மூடிக்கொண்டு செய்வது இன்னொன்று கண்களை திறந்து கொண்டு செய்வது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல.

அனால் கண்களை திறந்துகொண்டு எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பாப்போம்.

meditation

Advertisement

வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, அந்த அறையில், நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கை வைக்க வேண்டும்.

அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளக்கோ வைத்து. அதில் திரி போட்டு பின் நல்லெண்ணெயோ அல்லது தேங்காய் நல்லெண்ணெயோ ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

dheepam

நம்மால் எவ்வளவு நேரம் தொடந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். விளக்கில் இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும். இதனால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்பாடு. இதை நாம் தொடர்ந்து செய்தால் நமக்குள் ஒரு பேராற்றல் வெளிப்படும். நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும்.

meditation

இந்த வகையான தியானத்தை செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. நமக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். இதை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையை புரிந்து நாமே இதை தொடர்ந்து செய்ய ஆரமித்துவிடுவோம்.

Advertisement