உங்கள் எதிரிகளை தண்டிக்காமல், தள்ளிவைக்க ஒரு சுலபமான வழி.

sad-lemon

ஒருவருக்கு வாழ்வில் முன்னேற்றங்கள், வெற்றிகள் தொடர்ந்து ஏற்பட்டால், அருகில் இருப்பவர்களது கண்ணை உறுத்த தான் செய்யும். நம் அருகில் இருப்பவர் நம் நண்பராக இருந்தாலும், நம் சொந்தக் காரர்களாக இருந்தாலும், நம் முன்னேற்றத்தை பார்த்து சற்று பொறாமைபடத் தான் செய்வார்கள். நம்மைப் பார்த்து பொறாமைப்படும் அவர்கள், நல்லவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு உண்டாகும் தாழ்வுமனப்பான்மையினால் நமக்கு மறைமுக எதிரி ஆகிவிடுவார்கள். அதாவது நம் முன்னேற்றத்திற்கு தடையாக சிறுசிறு சிலுமிஷங்களை செய்து வருவார்கள். இதனால் நமக்கு அவப்பெயர் ஏற்பட்டு, நமது முன்னேற்றத்தில் தடைகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி நீங்கள் உங்களது மனதில் யாராவது ஒருவரை எதிரியாக நினைக்கிறீர்களா? அவர்களை தண்டிக்க வேண்டாம். உங்களிடமிருந்து தள்ளி வைத்து விடுவோம். அதற்கான ஒரு சின்ன பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் உங்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கு முட்டுக் கட்டையாக நிற்கும் உங்களது எதிரிக்கு எந்தவிதமான பாதிப்பும் நிச்சயம் வராது. ஆனால் அவர்கள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.

elumichai lemon

எந்த ஒரு புள்ளிகளும் இல்லாத ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களின் வலது உள்ளங்கையை திறந்தவாறு வைத்து அதன் நடுவில் எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும். உங்களது உள்ளங்கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை பார்த்தவாறு, உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த நபரை நினைத்துக்கொண்டு, ‘எதிரி உங்களுக்கு கொடுத்த தொல்லைகளை எல்லாம் இனி கொடுக்கக்கூடாது’ என்று மனதார குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது அந்த வேண்டுதலானது இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து வேண்டப்பட வேண்டும். என்ன வேண்டுதலாக இருந்தாலும், அது குறிப்பிட்ட ஒரு வேண்டுதலை நோக்கி இருக்கவேண்டும். பலவகைப்பட்ட பிரச்சினைகளை கூற வேண்டாம்.

உதாரணத்திற்கு நீங்கள் செய்யும் சொந்தத் தொழிலில் உங்களுக்கு அதிக எதிரிகளின் மூலம் போட்டிகள் இருந்தால் ‘வியாபாரத்தில் எனக்கு பிரச்சனை தருபவர்கள் யாராக இருந்தாலும் என்னை விட்டு விலகி செல்ல வேண்டும்’ என்றவாறு வேண்டிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இதை 11 முறை உச்சரித்தால் சிறந்தது. நன்றாக வேண்டி முடித்துவிட்டு அந்த எலுமிச்சை பழத்தை வேப்பமரத்தின் அடியில் புதைத்து விட வேண்டும். இப்படி செய்தால் உங்களின் எதிரிகள் நிச்சயம் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள்.

elumichai-palam

பொதுவாகவே இந்த எலுமிச்சை பழத்திற்கு கெட்ட சக்தியை விரட்டி அடிக்கும் தன்மை உள்ளது. எலுமிச்சையை சிவன் ரூபம் என்றும், மஞ்சள் குங்குமத்தை, சக்தி ரூபம் என்றும் கூறுவார்கள். இதனால்தான் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பக்கத்தில் மஞ்சளும், மறு பக்கத்தில் குங்குமமும் வைத்து வாசற்படியில் வைத்தால் கெட்ட சக்திகள் அண்டாது என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட எலுமிச்சை பழத்தில் வைத்துக்கொண்டு நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சக்தியான அந்த குறிப்பிட்ட நபர், நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்று நாம் என்னும் எண்ணமானது நிச்சயமாக நிறைவேற்றப்படும். வேப்ப மரம் என்பதும் தெய்வீக சக்தி நிறைந்த மரம் தான். வேப்ப மரத்தடியில் புதைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தின் மூலம் யாருக்கும் எந்த தீமையும் நடக்காது என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
தீயசக்தி உங்களை விட்டு விலகி விட்டது என்பதை கண்கூடாக காண முடியும் உப்பு பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ethirigal thollai neenga Tamil. Ethirigal oliya Tamil. Ethirigal vilaga Tamil. Ethirigal azhiya Tamil. Ethiriyai viratta Tamil.