தீயசக்தி உங்களை விட்டு விலகி விட்டது என்பதை கண்கூடாக காண முடியும் உப்பு பரிகாரம்.

salt-parihar

கல் உப்பை வைத்து பலவகைப்பட்ட, பல பரிகாரங்கள் உள்ளது. இந்த உப்பை காலம் காலமாக மகத்துவமான பொருளாக நாம் மதித்து வருகின்றோம். கல் உப்பை வைத்து செய்யப்படும் சிறிய பரிகாரமாக இருந்தாலும் அதற்கான மகத்துவம் மிகவும் அதிகம். இன்றைக்கு இந்த பதிவின் மூலம் அப்படிப்பட்ட மகத்தான ஒரு பரிகாரத்தைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம். முழு மனதோடும், நம்பிக்கையோடும், நாம் நினைப்பது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நேர்மறை எண்ணத்தோடு செய்தால் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் நிச்சயம் பலிக்கும். மனதார நம்பிக்கை இல்லாதவர்கள் பரிகாரத்தை செய்வதில் எந்த ஒரு பலனும் இல்லை.

salt

நம்மில் பல பேர் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடைய சந்தோஷமான வாழ்க்கையில் திடீரென்று எதிர்பாராமல், காரணமே இல்லாமல், பிரச்சனைகள் தொடர்ந்து வர ஆரம்பிக்கும். பிரச்சனை எந்த வழியாக வந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு தீர்வே கிடைக்காது. நமக்கு எதிரிகள் கூட இருக்கமாட்டார்கள். எதிரிகள் இருந்தால் கூட ஏதாவது ஏவல், பில்லி, சூனியம் வைத்திருப்பார்கள் என்று கூறலாம். எதிரிகளும் இல்லை. வேறு எந்த வகையான பிரச்சனையும் இல்லை. ஜாதக கட்டத்தில் பிரச்சினையும் இல்லை. அப்பொழுது உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று சிந்தித்துப் பார்த்தால், சில சமயம் நம்மை அறியாமலேயே வெளியிடங்களுக்கு செல்லும்போது, நம்மை அறியாமல் நம்மை தாக்கி இருக்கும் கெட்ட சக்திகள் தான். எப்படி?

நம்மை சுற்றி இருக்கும் சுற்றுவட்டத்தில் நல்லது செய்பவர்கள் மட்டும் இல்லை. கெட்ட செயல்களை செய்பவர்களும் இருந்து தான் வருகிறார்கள். யாரோ யாருக்காகவோ வைத்த செய்வினை, தீவினை, பில்லி சூனியம் வைத்த பொருட்கள் எலுமிச்சை பழம், இப்படி அடுத்தவர்களுக்காக ஏவி விடப்பட்ட பொருட்களை நாம் மிதித்து இருந்தாலோ அல்லது தாண்டி இருந்தாலும் அதற்கான தோஷம் நிச்சயம் நம்மை தாக்கும். அதற்கான கெட்ட பலன்களும் நமக்குத்தான் வந்துசேரும். இப்படி ஒரு சூழ்நிலையில் நம்முடைய உடல் நிலை பாதிக்கப்படும். ஆரோக்கியம் கெடும். மனநிம்மதி போகும். பண கஷ்டம் ஏற்படும். இப்படி பிரச்சினைகள் நம்மைத் தொடர்ந்து வரும்.

dhristi lemon

இதில் இருந்து நாம் விடுபட ஒரு சுலபமான வழியை மேற்கொள்ளலாம். ஒரு வாளியில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும். அதில் கல் உப்பை அரை பக்கெட் அளவிற்கு கொட்டிவிட வேண்டும். அந்த நீரில் நம் கால்களை வைத்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவி எடுக்க வேண்டும். நீங்கள் உங்களது காலை அந்த உப்பு தண்ணீரில் வைத்திருக்கும் 15 நிமிடங்களும் உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சனையானது உங்களை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் அந்த தண்ணீரின் நிறம் சிலருக்கு கருப்பாக மாறும். சிலருக்கு துர்நாற்றம் ஏற்படும். இவ்வாறு நடந்தால் உங்களிடம் இருந்த கெட்ட சக்தியினை அந்த உப்புத்தண்ணீர் ஈர்த்துக் கொண்டது என்பதுதான் அர்த்தம். உங்களின் கால்களில் உள்ள அழுக்கினால் அது கருப்பாகிறது நினைத்தால் உங்கள் கால்களை நன்றாக சுத்தப்படுத்திவிட்டு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

salt-water

இப்படி நீங்கள் பரிகாரம் செய்த போது தண்ணீரில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றால் உங்களுக்கு கெட்ட சக்தியினால் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தான் அர்த்தம். ஆனால் மாற்றம் இருந்தால், தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் அடித்தால், அந்த சமயம் உங்கள் உடலானது சோர்வாகவும், ஏதோ ஒன்றை நீங்கள் இழந்தது போலவும் ஒரு உணர்ச்சியை அடைவீர்கள். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் உங்களிடம் இருந்த கெட்ட சக்திகளை அனைத்தும் அந்தக் கல் உப்பு நீர் ஈர்த்து விட்டது என்பதை குறிக்கும். இந்த பரிகாரத்தை நம்பிக்கை உள்ள யார் வேண்டுமென்றாலும் செய்து பார்க்கலாம். இதனால் பாதிப்பு அடைவதற்கு எதுவும் இல்லை.

இதையும் படிக்கலாமே
குத்து விளக்கை எந்த நாட்களில் துலக்கினால் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Salt pariharam. Kal uppu pariharam. Kal uppu pariharam in Tamil. Uppu pariharangal Tamil.