எப்படிப்பட்ட வசியத்தையும் 5 நாளில் சரி செய்ய இதை சாப்பிட்டால் போதும்.

temple

ஒரு தனிநபரை அடிமையாக்க வேண்டும் என்றாலும், அந்த நபரை தன் பின்னாலேயே சுற்ற வைக்க வேண்டுமென்றாலும், நாம் என்னவெல்லாம் சொல்கின்றோமோ அதை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தட்டாமல் இருக்க வேண்டுமென்றாலும், அந்த நபரை சிந்திக்க விடாமல் மயக்கி தன்னுடனே வைத்துக் கொள்ள உபயோகப்படுத்தப்படும் ஒரு சூட்சமம் தான் வசியம். ஒருவருடைய தலை முடி, காலடி மண், அவர்கள் அணிந்திருக்கும் உடை, நகம் இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தால் கூட அதை வைத்து வசிய மருந்தை தயார் செய்து, அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் தெரியாமல் கலந்து கொடுத்து விட்டால் அவ்வளவுதான். வசியத்தால் பாதிக்கப்பட்டவர், வசியம் வைத்த அந்த நபருக்கு அடிமையாகவே மாறி விடுவார். வசியத்தை வைத்தவரின் சொல்லுக்கும், கட்டளைக்கும் தலையாட்டும் தலையாட்டி பொம்மையாக தான் செயல்படுவார். சாதாரணமாக இருக்கும் தனிநபரின் செயல்பாட்டிற்கும், வசியத்தால் பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டிற்கும், சாதரணமாக இருப்பவரின் செயல்பாட்டிற்கும் வித்தியாசத்தை நம்மால் நன்றாகவே உணர முடியும். சற்று சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு கொடுமையான விஷயம் தான். ஆனால் வசியத்தில் சிக்கியுள்ளவரையும் சுலபமாக மீட்டெடுக்க ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vellai-poosanikkai

தோல் சீவிய வெள்ளைப்பூசணி 50 கிராம், மிளகு தூள் 5 கிராம், காய்ந்த மிளகாய் விதை 5, தேங்காய் பால் கெட்டியாக (முதலில் எடுத்தது) 100ml, பசும்பால் 50ml. இந்த பொருட்கள் அனைத்தும் இதே அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் முதலில் தேங்காய் பால், இரண்டாவதாக பசும்பால், மூன்றாவதாக வெள்ளைப்பூசணி, நான்காவதாக மிளகுத்தூள், ஐந்தாவதாக காய்ந்த மிளகாய் விதை இவற்றை ஒன்றாக சேர்த்து 15 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். பூசணிக்காய் மசியும் அளவிற்கு வேக வைக்க வேண்டும். மத்துகாம்பை போட்டு நன்றாக கடைந்து, நமக்கு கிடைக்கும் அந்த விழுதினை, வசியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தினம்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், மூன்று ஸ்பூன் வீதம், ஐந்து நாள் தொடர்ந்து இந்த விழுதை சாப்பிட்டு வந்தால் மலத்தின் மூலமாக வசிய மருந்து வெளியேற்றப்படும். சில பேர் தனக்கு வசியம் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு இந்த மருந்தை சாப்பிட ஒத்துக் கொள்வார்கள். சில பேர் மருந்தை சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மருந்தை சாப்பிடாமல் இருக்க என்ன வழியோ அதைத்தான் தேடுவார்கள்.

ஏனென்றால் அவருக்கு வைக்கப்பட்ட வயதிலேயே வசிய முறிவு மருந்தை சாப்பிடகூடாத அளவிற்கு வசியம் வைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்களாக இருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமலேயே இந்த மருந்தை அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஏதாவது ஒன்றில் 9 நாட்கள் தொடர்ந்து கலந்து கொடுத்து விடலாம். கண்டிப்பாக பாலில் கலந்து கொடுக்கக்கூடாது. மற்ற உணவுப் பண்டங்களில் கலக்கலாம். இப்படி செய்தால் அவர்களுக்கு தெரியாமலேயே வசியமருந்து வெளியேறிவிடும்.

- Advertisement -

வசிய மருந்தை சாப்பிட கொடுப்பதற்கு முன்பாக, வசியம் முற்றிலுமாக வெளியேறிவிட்டால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறேன் என்று வேண்டிக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to remove vasiya marunthu in Tamil. Vasiya marunthu removal in Tamil. Vasiya marunthu edupathu eppadi. Vasiya marunthu edukkum murai. Vasiya marunthu in Tamil.