உங்கள் பார்ட்னர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா? இந்த தீபம் ஏற்றி பாருங்கள் அனைத்தும் மாறும்.

agal-marraige

நினைத்த வாழ்க்கை எல்லாருக்கும் நினைத்தது போல் அமைந்து விடுவதில்லை. அதுவும் திருமண வாழ்க்கை என்பது இறைவனால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. இன்று இருப்பது போல் எதுவும் நாளை இருப்பதில்லை. அப்படி இருக்க மனித மனம் மட்டும் அப்படியே இருந்து விடுமா என்ன? மனிதன் தான் குரங்கிலிருந்து தோன்றியவன் ஆயிற்றே!! அதனால் தான் என்னவோ மனிதனின் குணம் ஒரே நிலையான ஒன்றில் இருப்பதில்லை. மாறி கொண்டே இருக்கும் மனதை சரியான பாதையில் அழைத்து செல்ல இறைவனின் துணை கட்டாயம் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

scolding-husband

நீங்கள் நல்ல எண்ணத்துடனே ஏதாவது கூறினாலும் அதையும் குற்றம் காணும் வகையில் உங்களது துணையானவர் நடந்து கொள்கிறார்களா? அதற்கும் உங்களின் கர்ம வினை தான் காரணம் என்றால் நம்ப முடியாது தான். ஆனால் அதுவே உண்மை. கருட புராணத்தின்படி எதனால் பாவம் இழைக்கிறீர்களோ அதனாலே தண்டனையும் கிட்டும். இன்று நீங்கள் உங்கள் துணையை புரிந்து கொள்ளாமல் அவர்களை காயப்படுத்தினால் அதே தண்டனை தான் உங்களுக்கும் ஏற்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது தான் புத்திசாலித்தனம். இதில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்ற பட்டிமன்றம் எல்லாம் வீண் வாதம் தான். இதனால் மேலும் மேலும் மனக்கசப்பு அதிகமாகி கொண்டே போகுமே ஒழிய பிரச்சனை தீராது.

பின்னர் இதற்கு என்ன தான் வழி என்று பார்த்தால் இறைவன் கொடுத்த தண்டனைக்கு அவனிடமே தீர்வும் இருக்கும். வாழ்க்கை மீதி விரக்தி கொள்வதை விடுத்து இதே நிலை நீடிக்காது என்ற முடிவிற்கு வாருங்கள். எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை வையுங்கள். நீங்கள் எதை ஆழமாக நினைக்கிறீர்களோ அது தான் உண்மையில் நடக்கும். ஆனால் ஆழமாக நினைக்க வேண்டும். ஒரே எண்ணத்தை வேரூன்றி விதைக்க வேண்டும். தடுமாறிவிடக் கூடாது.

praying hand

இந்த சிறு பரிகாரம் செய்து உங்கள் துணையின் போக்கில் அல்லது உங்களது எண்ணத்தில் மாறுதல்களை உண்டு பண்ணலாம். இந்த பரிகாரத்தை திங்கள், வியாழன், வெள்ளி இந்த தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். எப்போதும் பூஜை அறையில் விளக்கேற்றுவது போல் ஏற்றிவிட்டு பின்னர் ஒரு தாம்பூலத்தட்டு எடுத்து வைத்து கொள்ளுங்கள். தட்டிற்கு மஞ்சள், கும்குமம் மற்றும் மலர்கள் வைத்து அலங்கரித்து கொள்ளுங்கள். அதன் நடுவில் இரண்டு நல்ல சுத்தமான இளம் வெற்றிலையை வையுங்கள். அதில் மஞ்சள் கொண்டு நட்சத்திரம் இடுங்கள். அதன் ஆறு முனைகளில் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். அதே போல் நடுவில் ஒன்று வையுங்கள். இரண்டு அகல் விளக்கை எடுத்து அதன் இரு புறமும் வைத்து கொள்ளுங்கள். பொட்டு கலையாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். நல்லெண்ணை அல்லது நெய் ஊற்றலாம். வெற்றிலையின் காம்பு பகுதியும், விளக்கின் ஜோதியும் இறைவனை பார்த்தவாறு தட்டை வைக்க வேண்டும். பஞ்சு திரி கொண்டு இப்போது விளக்கு ஏற்றி உங்கள் வேண்டுதலை வைக்கவும். அவ்வளவுதான்.

- Advertisement -

agal-vetrilai

இவ்வாறு 9 வாரம் உங்களால் முடிந்த கிழமையில் இரவு 8 மணிக்குள் செய்து விட வேண்டும். 9 வாரத்திற்குள் நல்ல மாற்றம் உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த துணையார் கட்டாயம் புரிந்து கொண்டு உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிப்பார். அவர்களிடம் கூறிவிட்டு செய்யுங்கள். இதை திருமணமான பெண்கள் தான் செய்ய வேண்டும். ஆண்களுக்கும் விருப்பம் இருந்தால் முயன்று பார்க்கலாம் தவறில்லை. ஒவ்வொரு வாரம் செய்யும் போதும் புதிதாக செய்ய வேண்டும். விளக்கை மட்டும் மாற்ற தேவையில்லை.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டையோ அல்லது உங்கள் வீட்டு குழந்தையையோ பார்த்து யாராவது கண் வைத்து விட்டது போல தெரிஞ்சா மொதல்ல இத பண்ணிருங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavan manaivi otrumai pariharam. Kanavan manaivi otrumai pariharam Tamil. Kanavan manaivi pariharam Tamil. Kanavan manaivi valipadu Tamil.