மேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

Vasthu tips in Tamil

பகல் முழுவதும் உலகிற்கு ஒளியை தரும் சூரியன் மாலையில் மேற்கு திசையில் அஸ்தமனம் ஆகிறது. ஜோதிட சாத்திரத்தின் படி மேற்கு திசை சனிபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. நமது முன்னோர்களால் பண்டைய காலத்தில் உண்டாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திர கலையில் மேற்கு திசையின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.

sani-bagavaan

நமது பண்டைய சாத்திரங்களில் சூரியன் அஸ்தமிக்கும் திசையான மேற்கு திசை நவகிரகங்களில் “சனி” கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட திசையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு திசைப் பார்த்தவாறு வீட்டின் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். நோய் நொடிகளால் அத்தகைய வீட்டில் வசிப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள்.

மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். எந்நேரமும் ஓய்வின்றி ஏதாவது பணி செய்து கொண்டேயிருப்பார்கள். சனி பகவான் உலோகங்களில் “இரும்பு” மீது ஆதிபத்தியம் நிறைந்தவர். இரும்பு வியாபாரம், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற வியாபாரங்கள், தொழில்களில் இருப்பவர்கள் மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பது அவர்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.

paathirakadai

ஜோதிடத்தில் சனி பகவானின் ராசிகளான மகரம், கும்பம் ராசியினர் மேற்கு திசையில் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பது, அந்த மேற்கு திசையை பார்த்தவாறு தலைவாயில் வைத்து தங்களின் சொந்த வீட்டை கட்டி குடிபுகுவது இந்த இரு ராசியினருக்கும் நீண்ட ஆயுள் மற்றும் நிறைவான செல்வம் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் விதியாகும்.

இதையும் படிக்கலாமே:
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்னையை தீர்க்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for west facing house in Tamil. it is also called west facing house vastu tips in Tamil.