எக் 65 செய்வது எப்படி

Egg-65

மாமிசம் போன்ற அசைவ உணவுகளை சாப்பிட விரும்பாதவர்கள் கூட சாப்பிடக்கூடிய உணவு வகையாக முட்டை இருக்கிறது. முட்டையை அவித்து, வறுத்து என பலவகையில் உண்கிறோம். அப்படி முட்டையை சமைத்து உண்ணும் ஒரு முறை தான் முட்டை 65. இதை செய்வதற்கான வழிமுறையை இங்கு காண்போம்.

Egg

தேவையான பொருட்கள்
முட்டை – 4
சின்ன வெங்காயம் – 5
மிளகாய் தூள் – 1டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணை – தேவைகேற்ப

முட்டை 65 / எக் 65 செய்முறை

முட்டைகளை நன்கு வேக வைத்து எடுத்துக்கொண்டு சமமான அளவில் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் அல்லது ஒரு முட்டையை நீள வாக்கில் இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

Egg 65

சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, மிளகாய் தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் சிறிதளவு சோள மாவு, புட் கலர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

Egg 65

வெட்டி வைத்த முட்டை துண்டுகளை இந்த மசாலா கலவையில் நன்கு தோய்த்து, ஒரு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதில் இந்த முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் முட்டை 65 தயார்.

Egg 65

சமைக்க ஆகும் நேரம்: 35 நிமிடங்கள்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 2

இதையும் படிக்கலாமே:
தித்திப்பான ஜாங்கிரி செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have Egg 65 recipe in Tamil. It is also called as Egg 65 seimurai or Egg 65 seivathu eppadi in Tamil.