முட்டை கறி செய்ய போறீங்களா? இந்த 1 பொருளையும் சேர்த்து செய்து பாருங்கள் சுவை வீட்டையே ஒரு வழி செய்து விடும்!

egg-curry_tamil
- Advertisement -

சுவையான முட்டை கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கு கூட நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த முட்டை கறி செய்யும் பொழுது இந்த ஒரு பொருளையும் சேர்த்து செய்தால் ருசி வீட்டையே ஒரு வழி செய்யும்! அப்படியான சீக்ரெட் என்ன? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

முட்டை – நான்கு, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – இரண்டு, கருவேப்பிலை – 1 கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், தக்காளி – 2, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – 11/2 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், கறி தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் பால் – ஒரு கப், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

முட்டை கறி செய்வதற்கு முதலில் முட்டைகளை அவித்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு அதில் காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இரண்டு வரமிளகாய்களை கிள்ளி சேர்த்து, ஒரு கொத்து கருவேப்பிலையை போடுங்கள்.

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் ரெண்டு பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்கு பிரட்டி விடுங்கள். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்க வேண்டும். இதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் சீக்கிரம் வதங்கும்.

- Advertisement -

இவை மசிய வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். மசாலா சேர்த்த பி‌ன் அடுப்பை குறைந்த தீயில் வைத்து வதக்குங்கள். பின்னர் ஒரு கப் தேங்காய் பாலில் இரண்டாவதாக எடுத்த பால் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் கலந்து விட்டு மூடி போட்டு வேக விடுங்கள்.

பின் நன்கு கொதித்து கெட்டியாக கிரேவி போல வந்ததும் வேக வைத்துள்ள முட்டைகளை நீளவாக்கில் பாதியாக வெட்டி கிரேவியில் கவிழ்த்து வையுங்கள். மெதுவாக கிரேவியை பிரட்டி விடுங்கள். பிறகு முதலில் எடுத்த பால் அரை கப் அளவிற்கு சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
காலைல எழுந்து டிபன் பாக்ஸ் கட்டணுமா? 1 கைப்பிடி கொத்தமல்லி மட்டும் இருந்தால் 10 நிமிடத்தில் சுவையான மல்லி சாதம் தயார் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

கொதித்து கெட்டியாக எக் கறி ரெடியானதும் நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாற வேண்டியதுதான்! எக் கறியை சூடான சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -