சப்பாத்தி மீந்து போன காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு இப்படி சுவையா செஞ்சி குடுங்க.

egg kothu chappathi recipe
- Advertisement -

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்போதுமே கடினமான வேலை தான். அவர்களுக்கு பிடித்த மாதிரியே செய்து கொடுத்தால் கூட மிச்சம் வைத்து விடுவார்கள் அல்லது சாப்பிடவே மாட்டார்கள். இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட அமைதியாய் சாப்பிட மீந்த சப்பாத்தியில் ஒரு அருமையான எக் கொத்து சப்பாத்தி ரெசிபி எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

மீதமான சப்பாத்தி – 4 (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள் )
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு -4 பல்,
இஞ்சி -1 துண்டு,
கருவேப்பிலை -1 கொத்து
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்,
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்,
பாவ் பாஜி மசாலா – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
முட்டை – 2,
கேரட் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த சப்பாத்தி செய்ய முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் காய்கறிகளையும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தியை உங்கள் விருப்பம் உதிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றிய பிறகு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கிய பிறகு கருவேப்பிலை தக்காளி சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக நறுக்கி வைத்த காய்கறிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடுங்கள். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பாவ் பாஜி மசாலா, உப்பு என அனைத்தையும் சேர்த்து இதன் பச்சை வாடை போகும் வரை லேசாக வதக்க வேண்டும்.

இப்போது காய்கறிகளை ஓரமாக ஒதுக்கிஸவிட்டு அதே பேனில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு காய், முட்டை மசாலா அனைத்தையும் ஒன்றாக சேரும்படி வதக்க வேண்டும். இப்போது எடுத்து வைத்திருக்கும் சப்பாத்தியை இதில் சேர்த்து ஒரு முறை கலந்து வதக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாரம்பரியமான பாசிபயறு பாயாசத்தை எளிமையாக செய்வது எப்படி?

ஐந்து நிமிடம் இவை எல்லாம் ஒன்றாக வதங்கி வந்த பிறகு மிளகுத் தூள், டொமேட்டோ கெட்சப் சேர்த்த பிறகு மீண்டும் ஒருமுறை கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். வித்தியாசமான சுவையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியான எக் கொத்து சப்பாத்தி தயாராகி விட்டது

- Advertisement -