பாரம்பரியமான பாசிபயறு பாயாசத்தை எளிமையாக செய்வது எப்படி?

pachai payaru payasam recipe
- Advertisement -

இனிப்பு வகைகள் என்றாலே முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது பாயாசம் தான். ஏனெனில் வீட்டில் அடிக்கடி செய்யப்படும் உணவும் இது தான். விசேஷ நாட்களிலும் செய்யப்படும் முக்கியமான உணவும் இது தான். இந்த பாயாசத்தில் பல வகைகள் உண்டு. அதிலும் நம் பாரம்பரியமாகவே வைக்கும் சில பாயாச வகைகள் உண்டு. அதே பாயாசம் இப்போது ரெடிமேட் பாயாசமாகவும் கிடைக்கிறது.

இந்த சமையல் குறிப்பு பதிவில் பாரம்பரிய பாயாசங்களில் ஒன்றான இந்த பாசிப்பருப்பு பாயாசத்தை நாளைய அமாவாசை வழிபாட்டில் வைத்து வழிபடுங்கள். பொதுவாகவே அமாவாசை வழிபாட்டில் பாசிப்பருப்பு கலந்த உணவை வைப்பது நல்லது என்ற ஒரு ஐதீகம் உண்டு. அந்த வகையில் இந்த பாயாசத்தை நாளை செய்து வைத்து வழிபடுங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 1/2 கப்,
வெல்லம் – 3/4 கப்,
தேங்காய் பல் – 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் – 3,
முந்திரி -10,
திராட்சை – 10,
காய்ச்சிய திக்கான பால் – 300 கிராம்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

இந்தப் பாயாசம் செய்ய பாசிப்பயிரை ஒரு முறை தண்ணீரில் அலசிய பிறகு குக்கர் வைத்து அதில் இந்த பருப்பை சேர்த்து மிதமான தீயில் பருப்பின் ஈரப்பதம் காய்ந்து லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இன்னொரு பக்கம் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து வெல்லத்தை சேர்த்து வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். வெல்லம் முழுவதுமாக கரைந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு வெல்லத் தண்ணீர் சூடு ஆறிய பிறகு தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாலை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக காய்ந்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் தாளிப்பு கரண்டியை வைத்து நெய் ஊற்றி சூடான பிறகு தேங்காய் தொல்லை சேர்த்து சிவந்தவுடன் எடுத்து விட்டு முந்திரி திராட்சையும் சேர்த்து வறுத்து அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பருப்பு விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு எடுத்து லேசாக கரண்டி வைத்து கடைந்து விட்டு அடுப்பில் மீண்டும் இந்த குக்கரை வைத்து கொதிக்க விடுங்கள். இந்த சமயத்தில் வடிகட்டி வைத்து வெல்ல கரைச்சலை ஊற்றி ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விட்ட பிறகு வெல்ல கரைசலுடன் பருப்பும் நன்றாக கலந்து கொதிக்க ஆரம்பிக்கும்.

இந்த சமயத்தில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஆறிய பாலையும் இதில் ஊற்றிய பிறகு தேங்காய், முந்திரி, திராட்சை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான பாசிப்பயிறு பாயாசம் தயார்.

இதையும் படிக்கலாமே: ஒருமுறை கோவைக்காயை இப்படி வறுத்து கொடுங்கள். ஐந்தே நிமிடத்தில் அனைத்தும் காலியாகி விடும்.

நம்மில் அநேகம் பேர் பாசிப்பருப்பில் தான் பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் பாசிப்பயிரைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி இதுபோல எளிமையாக செய்து நாளை அமாவாசை படையலில் வைத்து வணங்குங்கள். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -