பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸை முகத்தில் இருந்து உடனடியாக நீக்க, இதைவிட பெஸ்ட் டிப்ஸ் வேற எதுவுமே இருக்க முடியாது. உங்க வீட்ல இந்த 3 பொருள் இருக்கா?

face20
- Advertisement -

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் முகத்தில் அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இந்த கருப்பு புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் தான். இதை பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லுவார்கள். இதை நீக்க வேண்டும் என்றால் கட்டாயமாக பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டும். அதிகமான காசு கொடுத்து, சில செயற்கையான பொருட்களை போட்டு ஸ்கரப் செய்து எடுத்தால்தான், இது உடனடியாக நீங்கும் என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே இந்த 3 பொருட்களை பயன்படுத்தி இப்படி பீல் ஆஃப் மாஸ்க் தயார் செய்து, முகத்தில் போட்டு இந்த மாஸ்க்கை பில் செய்து எடுத்தாலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் வெள்ளைப் புள்ளிகள் நீங்கிவிடும்.

coffee-mask

பெஸ்ட் பீல் ஆஃப் மாஸ்க் நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது, அதை எப்படி நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவது என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பீல் ஆஃப் மஸ்கை செய்ய தேவையான பொருட்கள் 1 முட்டையின் உள்ளே இருக்கும் வெள்ளைக்கரு, காபி தூள் – 1/2 ஸ்பூன், ஜெலட்டின் பவுடர் 1/2 ஸ்பூன்.

- Advertisement -

ஜெலட்டின் பவுடரை முகத்தில் போடுவதால் ஏதேனும் பக்கவிளைவுகள் வந்துவிடுமோ என்ற பயம் தேவையில்லை. இதை நாம் சாப்பிடும் ஜெல்லியிலும் கலப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் காபி தூளையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். ஜெலட்டின் பவுடர் அவ்வளவு எளிதில் கரையாது.

coffee-cream

முதலில் ஒரு ஸ்பூனை கொண்டு முட்டையின் வெள்ளை கருவோடு இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலக்கும்படி அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, ஜெலட்டின் பவுடர், காப்பித் தூள் சேர்த்த இந்த கலவையானது கிண்ணத்தில் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கக் கொதிக்க இருக்கக்கூடிய வெந்நீரை ஊற்றி, அந்த வெந்நீரின் மேல் இந்த தயாராக வைத்திருக்கும் சிறிய  கிண்ணத்தை வைத்து, அதை 3 லிருந்து 5 நிமிடங்கள் நன்றாக சூடு படுத்தினால், முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் ஜெலட்டின் காப்பித்தூள் இரண்டுமே கரைந்துவிடும். ஒரு ஸ்பூனை வைத்து இந்த கலவையை கலந்து கொண்டே இருங்கள்.

coffee-mask2

அடுப்பின் மேலே வைத்து டபுள் பாய்லிங் செய்யக்கூடாது. முட்டையின் வெள்ளைக்கரு வெந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இது ஒரு ஜெல் பதத்திற்கு நமக்கு கிடைக்கும். இந்த ஜெல் நன்றாக ஆறியதும் முகத்தில் எப்படி அப்ளை செய்வது.

- Advertisement -

steam

உங்களுடைய முகத்தை ஸ்டீம் செய்ய வேண்டும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நன்றாக தண்ணீரை கொதிக்க கொதிக்க சூடு செய்து விட்டு, அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தைக் காட்ட வேண்டும். ஒரு பெட்சீட்டை கொண்டு போர்த்திக்கொண்டு ஜலதோஷம் பிடித்தால் ஆவி பிடிப்பது போல், முகத்தை வெந்நீரில் காட்டி ஸ்டீம் செய்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் வரை ஆவி பிடிக்கலாம்.

coffee-mask3

அதன் பின்பு முகத்தை நன்றாக  துடைத்து விட்டு, இந்த டபுள் பாய்லிங் செய்து தயாராக இருக்கும் ஜெல்லை முகம் முழுவதும் கொஞ்சம் தடிமனாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். 20 நிமிடங்களில் இந்த ஃபேஸ் மாஸ்க் நன்றாக காய்ந்த பின்பு, மெல்லமாக முகத்திலிருந்து இதை உரித்து எடுத்தால், முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ், தேவையற்ற சின்ன சின்ன முடிகள் அனைத்தும் சுலபமாக நீங்கிவிடும். குறிப்பாக மூக்கின் மேல் திக்காக போட்டுக் கொள்ளுங்கள்.

face10

வாரத்தில் ஒரு நாள் இப்படி செய்யலாம்‌. அப்படி இல்லை என்றால் விசேஷ நாட்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் செய்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் தினம்தோறும் செய்யக்கூடாது. உங்களுக்கு இந்த குறிப்பை பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -