செல்வ வளம் பெருகச்செய்யும் 8 எளிய வழிகள்

money

லட்சுமி கடாச்சம் பெருக, மிகப்பெரிய யாகங்களோ தவமோ தேவையில்லை. அன்றாட வாழ்வில் ஒரு சில வழக்கங்களை கடைபிடித்தாலே போதும், லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

money

வில்வ மரத்தடியில் திருமகள் வசிக்கிறாள். ஆகையால் வில்வ இலைகளால் திருமகளை வணங்கினால் நல்ல பலன் பெறலாம்.

அஷ்டலட்சுமிகளும் வழிபடும், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபட்டால், செல்வ வளம் பெருகும்.

காலையில் எழுந்ததும், உள்ளங்கையில் வசிக்கும் லட்சுமியை காணவேண்டும். கைகளால் உழைத்தால் தான் திருமகளை காணமுடியும் என்பதே அதன் பொருள்.

money

அனைத்து செல்வங்களையும் அருளும் ஆற்றல், பத்மாவதி தாயார் அமர்ந்திருக்கும் செந்தாமரை மலருக்கு உண்டு.

தீப ஒளி, யானை, பூரண கும்பம் ஆகியவற்றில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். இவை மூன்றும் இருக்கும் இடத்தில செல்வவளத்திற்கு குறைவிருக்காது.

குபேரனை பூஜிப்பதற்கு முன்பாக மகாலட்சுமியை பூஜித்தால் அளவற்ற செல்வம் நிலையாக இருக்கும்.

money

செல்வ வளம் பெருக, தினமும் 108 முறை கூறவேண்டிய மந்திரம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி
யேகி யேகி சர்வ சௌபாக்யமே தேகி ஸ்வாஹா

லட்சுமி, குபேர மந்திரங்களை கூற முடியாதவர்கள், திருமூலர் அருளிய “ஓம் ஐஸ்வரேஸ்வராய நாம” என்று கூறலாம்.