அட ஏகாதசி என்றால் பெருமாளை தானே வழிபாடு செய்ய வேண்டும். இது என்ன புது வழிபாடு, அம்மன் வழிபாடு. ஏகாதசி அன்று அம்மனை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்குமா. நிச்சயம் ஏகாதசி திதி அன்று அம்மனை வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்தது அப்படியே பதினோரு நாட்களில் நிச்சயம் நடக்கும். ஏகாதசி அன்று பெருமாள், சக்தி தேவியை வழிபாடு செய்ததன் காரணமாகத்தான், ஏகாதசி திதி அன்று பெருமாள் வழிபாடு சிறப்பு என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரங்கள்.
சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையே நாமெல்லாம் சவம் என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் சக்தி இல்லை என்றால் நம்மால் இந்த பூமியில் வாழ முடியாது. பேசுவதற்கு சக்தி வேண்டும் எழுதுவதற்கு சக்தி வேண்டும் மூச்சு விடுவதற்கு கூட சக்தி வேண்டும். வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான சக்தி கொடுக்கக்கூடிய, சக்தி தேவியை ஏகாதசி திதி நாளில் வழிபாடு செய்வது எப்படி.
அதிலும் குறிப்பாக நீங்கள் ஏகாதசி திதி அன்று பிறந்திருந்தால், இந்த வழிபாடு உங்களை வாழ்க்கையில் எங்கேயோ கொண்டு செல்லும். வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று பிறந்தவர்களுக்கு இந்த வழிபாடு அபரிவிதமான முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய வழிபாடாக இருக்கும். ஏகாதசியில் பிறக்காத மற்றவர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். தீராத துன்பங்கள் 11 நாளில் தீரும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
ஏகாதசி அம்மன் வழிபாடு
சரி இன்று வளர்பிறை ஏகாதசி திதி 8.4.2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து இந்த திதி வந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை என்றால் அம்மனுக்கு உரிய நாள். சிவன் கோவில் உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த கோவில் இருந்தாலும் சரி, அந்த கோவிலில் சக்தி தேவைக்கு சன்னதி இருக்கும். அந்த சக்தி தேவியை வழிபாடு செய்ய வேண்டும்.
பார்வதி தேவி ரூபத்தில் எந்த அன்னை இருந்தாலும் சரி, அந்த அம்மனை இன்று வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாது என்றால் பூஜை அறையிலேயே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு “மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி” என்ற நாமங்களை உச்சரித்து அம்மனுக்கு மல்லிகை பூ சூட்டி எளிமையாக பூஜையை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். 11 முறை இந்த மந்திரத்தை சொல்லி, 11 முறை மல்லிகை பூக்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்தால், நீங்கள் வேண்டியது 11 நாளில் நடக்கும்.
இதையும் படிக்கலாமே: வெற்றிலை மாலை பலன்கள்
நீங்கள் வேண்டுமென்றால் எளிமையான இந்த வழிபாட்டை உங்கள் வீட்டிலேயே செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் சக்தி தேவி வீட்டிற்கு குடும்ப தலைவி இந்த வழிபாட்டை மேற்கொண்டால், உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.