- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்எலிகள் இனி நீங்க இருக்க திசைப்பக்கம் கூட வராம தலை தெறிக்க ஓட வைக்க ஒரு...

எலிகள் இனி நீங்க இருக்க திசைப்பக்கம் கூட வராம தலை தெறிக்க ஓட வைக்க ஒரு ரூபா ஷாம்பு பாக்கெட் இருந்தா இப்படி செஞ்சு வெச்சிருங்க. எலி தொல்லை இனி இல்ல.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் அன்றாடம் பிரச்சனைகளை சமாளிப்பதே பெரிய பாடாக இருக்கும் போது, இந்த எலிகள் படுத்தும் பாடு அதைவிட பெரிதாகவே இருக்கும். எந்த பொருளை வாங்கி வைத்தாலும் கடித்து வீணாக்கி விடுவது, உணவுப் பொருட்கள் கூட இதன் தொல்லையால் அதிக அளவு வீணாகி விடுவது போன்றவை எல்லாம் தினந்தினம் பெரும்பாலானோர் வீட்டில் நடப்பது தான். இந்த எலி தொல்லையில் இருந்து நாம் எப்படி தப்பிப்பது என்பதை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

எலி தொல்லையில் இருந்து தப்பிக்க
பொதுவாக வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது எலி பூச்சி தொல்லைகள் வராமல் தடுக்க நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றே சொல்லலாம். அதே போல் சமைக்கும் பொருள்களை மூடி வைத்து பழகுவது மிகவும் நல்லது. வீட்டில் சுற்றிலும் குப்பை அழுக்கு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது இதையெல்லாம் செய்வதினால் எலித்தொல்லை வராமல் இருப்பதுடன் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும்.

- Advertisement -

இப்போது எலி தொல்லை இல்லாமல் இருப்பதற்கான அந்த மருந்தை தயார் செய்து விடுவோம். இதற்கு தேவையில்லாத ஒரு சிறிய கிண்ணமோ பிளாஸ்டிக் டப்பாவோ எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் தனி மிளகாய் தூள்இதில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.இவையெல்லாம் கலந்த பிறகு ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் உள்ள ஷாம்பு முழுவதுமாக இதில் கலந்து கொள்ளுங்கள்.

இதை கலந்து நன்றாக குழைத்த பிறகு ஒரு வெள்ளை நிற துணியில் இந்த பேஸ்ட்டை முழுவதுமாக தேய்த்து விடுங்கள். எலிகளுக்கு வெள்ளை நிறத்தை பார்த்தால் ஒரு ஈர்ப்பு தன்மை ஏற்பட்டு அதன் அருகில் வரும். அதன் மேல் இந்த பேஸ்ட்டை தடவிய பிறகு கற்பூரம் அல்லது நாப்தலின்பால் இரண்டில் ஏதாவது ஒன்றை பவுடர் ஆக்கி அதை கொஞ்சம் இதன் மேல் தூவி விடுங்கள். பிறகுஅந்த துணியை எலி வரும் இடங்களில் எல்லாம் சின்ன சின்ன துண்டாக நறுக்கி வைத்து விடுங்கள். எலி இதில் வாயில் வைத்தாலே போதும். அதன் பிறகு இந்த எலிகள் நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட வராது.

- Advertisement -

இந்த மருந்து தயாரிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம். வீட்டில் சமைக்க பயன்படுத்தும் எந்த ஒரு பாத்திரத்தையும் இதற்கு பயன்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் முடிந்த வரையில் இதை இரவு நேரத்தில் வைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இதை எடுத்துப் போட்டு விடுங்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை செய்யும் போது மிக மிக கவனமாக செய்ய வேண்டும் குழந்தைகள் எந்த காரணத்தை கொண்டும் இதை எடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி கை வலிக்க வலிக்க வீடு முழுவதும் மாப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சும்மா இந்த தண்ணீரை மட்டும் வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். டைல்ஸில் ஒட்டி இருக்கும் அழுக்கு எல்லாம் தானமாக சுத்தமாயிரும்.

இந்த முறையில் செய்து வைக்கும் போது எலி தொல்லை நிச்சயமாக இருக்காது. பொதுவாக எலியை விரட்ட பயன்படுத்தும் மருந்துகள் அனைத்தும் எலிகள் சாப்பிட்டவுடன் வீட்டிற்குள்ளேயே எங்காவது ஓரிடத்தில் இறந்து விடும். அதை தேடி கண்டு பிடித்து எடுப்பதற்குள் வாடை வந்து அதுவே பல வியாதிகளுக்கு வழி வகுத்து விடும். இந்த முறையில் மருந்து தயாரிக்கும் பொழுது எலிகள் சாகாமல் ஓடி விடும். பொதுவாக எந்த உயிரையும் கொல்லாமல் அதன் தொல்லையில் இருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என்பதை மட்டும் யோசிப்பது நல்லது. இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் முயற்சி செய்து பாருங்க.

சற்று முன்