இனி கை வலிக்க வலிக்க வீடு முழுவதும் மாப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சும்மா இந்த தண்ணீரை மட்டும் வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். டைல்ஸில் ஒட்டி இருக்கும் அழுக்கு எல்லாம் தானமாக சுத்தமாயிரும்.

mop
- Advertisement -

சின்ன வீடாக வைத்திருந்தாலும்,  பெரிய வீடாக வைத்திருந்தாலும் இல்லத்தரசிகளுக்கு வீட்டை கூட்டி சுத்தம் செய்து மாப் போடுவதில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக சுவர்களின் ஓரங்களில் இருக்கக்கூடிய டைல்ஸ், சுவற்றில் ஓரத்தில் ஒட்டி இருக்கக்கூடிய டைல்ஸுக்கு மேலே இருக்கக்கூடிய பகுதி, சமையல் அறை மேடைக்கு கீழே இருக்கும் பகுதி, சமையல் அறை, ஃப்ரிட்ஜ் பின்னால், வாஷிங் மெஷினுக்கு பின்னால் என்று அழுக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்காக தான் இருக்கும். இப்படிப்பட்ட இடத்தை மாப் போட வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.

சாதாரணமாக வீட்டிற்கு நடுவே இருக்கும் டயல்ஸை துடைப்பை விட, மேல் சொன்ன இடங்களை துடைப்பதில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். இப்படி வீடு துடைக்கும் போது சிரமமே இருக்கக் கூடாது. லேசாக மாப் போட வேண்டும். அதே சமயம் தரையில் இருக்கும் அழுக்கும் நீங்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இருக்கு, இதற்கும் ஒரு வீட்டு குறிப்பு இருக்கு. அது என்ன என்பதை பற்றிய பயனுள்ள தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

ஈசியாக வீட்டை மாப் போட சூப்பர் ஐடியா:
முதலில் ஒரு ஸ்பூன் பேஸ்ட் எடுத்துக்கோங்க. அதை ஒரு கிண்ணத்தில் போடுங்க. இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, இந்த பேஸ்ட்டை நன்றாக கரைத்து விடுங்கள். கரைந்திருக்கும் இந்த பேஸ்ட்டோடு 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கலந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் வெள்ளையாக மாறி இருக்கும் அல்லவா. இந்த பேஸ்ட் தண்ணீரை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி, வாட்டர் கேனை மூடி போட்டு விடுங்க. மூடிக்கு மேலே சின்ன சின்ன ஓட்டை போட்டுக்கோங்க. இந்த தண்ணீரை வீடு முழுவதும் ஸ்பிரே செஞ்சி வாங்க. 5 நிமிஷம் அப்படியே ஊறட்டும். (குறிப்பா மூளை முடுக்குகளில் அழுக்கு நிறைந்த இடத்தில் சமையலறையில் இந்த வேலையை நீங்க செய்யணும்.)

- Advertisement -

இதற்குள் மாப் அடிக்க பக்கெட் தண்ணீர் எடுத்துக்கோங்க. அந்த தண்ணீரில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கல் உப்பு 1 கைப்பிடி அளவு, பேக்கிங் சோடா 1 டேபிள்ஸ்பூன், 1 கற்பூரத்தை நசுக்கி போட்டு, பிறகு உங்கள் வீடு வாசமாக இருக்க ஃபேப்ரிக் கண்டிஷனர் ஏதாவது இதில் 1 ஸ்பூன் ஊற்றலாம். துணிக்கு போடுவீங்க அல்லவா. வாசமாக இருப்பதற்கு கம்ஃபோர்ட் போன்ற வாசனை திரவியத்தை இந்த தண்ணீரில் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரில் மாபை நினைத்து லேசாக வீட்டை மாப் அடிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கால் மிதியடியை கைப்படாமல் அழுக்குப் போகத் துவைக்க ஒரு வாட்டர் கேனில், இப்படி ஒரு சூப்பர் ஐடியாவா? இந்த ஐடியா முன்னால் வாஷிங்மெஷின் தலை குனிந்து நிற்கும்.

வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் கூட பேஸ்ட் தண்ணீரில் ஊறி இருக்கும்மா. லேசாக மாப் போட்டால் எல்லா அழுக்கும் சுலபமாக நீங்கிவிடும். குறிப்பாக சமையல் அறையில் ஓரங்களில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை நீக்க இந்த ஐடியா சூப்பரா ஒர்கவுட் ஆகும். பிரிட்ஜுக்கு பின்னால் டைல்ஸில் படிந்திருக்கும் அழுக்கை சுத்தம் செய்யவும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். தரையில் அழுக்கு, பிசுபிசுப்பு இருக்கவே இருக்காது. டைல்ஸ் அப்படியே பளிச் பளிச்சென்னு மாறிடும். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்தவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -