எள்ளு சாதம் செய்முறை

ellu sadam
- Advertisement -

நம்முடைய அன்றாட சமையலை எளிதாக்கி கொள்வதற்காக சில பொடிகளை நாம் தயார் செய்து வைத்திருப்போம். அந்த பொடிகளை பயன்படுத்தி நம்முடைய சமையலை எளிதிலும் நாம் செய்து முடித்து விடுவோம். அந்த வகையில் மிகவும் எளிதில் மதிய உணவை தயார் செய்வதற்கு எள்ளு பொடி மிகவும் உதவியாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் எள்ளு சாதம் எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

எள்ளில் கருப்பு எள்ளு வெள்ளை எள்ளு என்று இரண்டு இருக்கிறது. இந்த எள்ளில் இருந்து தயார் செய்யப்படுவது தான் நல்லெண்ணெய். நல்லெண்ணெய் எந்த அளவிற்கு நம் உடலுக்கு நன்மை தருகிறது என்று நமக்கு தெரியும். அந்த அனைத்து விதமான நன்மைகளையும் எள்ளிலிருந்து நம்மால் பெற முடியும். வளரும் குழந்தைகள் எள்ளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் எலும்புகள் வலுப்பெறும். மேலும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்தும் இதில் அதிக அளவு இருக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • வடித்த சாதம் – ஒரு கப்
  • கருப்பு எள் – 3 டேபிள் ஸ்பூன்
  • உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
  • வர மிளகாய் – 7
  • கருவேப்பிலை – 3 கொத்து
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் வடித்த சாதத்தை நன்றாக ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உளுந்தை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். உளுந்தை வருத்தப்பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு ஐந்து வரமிளகாயை போட்டு வறுத்து அந்த உளுந்துடன் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எள்ளை அதில் சேர்த்து எள்ளு நன்றாக பொரிந்ததும் அதையும் எடுத்து உளுந்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இரண்டு கொத்து கருவேப்பிலையையும் சேர்த்து அதன் ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுத்து அதையும் உளுந்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக பெருங்காயத்தூளையும் எள்ளு பொடிக்கு தேவையான உப்பையும் சேர்த்து லேசாக வருத்தப்பிறகு அதையும் எடுத்து உளுந்துடன் சேர்த்து ஆற வைத்து விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விட்டு விட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரே நேரத்தில் முழுவதுமாக நாம் அரைத்தால் எள்ளில் இருந்து எண்ணெய் சத்து வெளியாகும் என்பதால் விட்டுவிட்டு அரைக்க வேண்டும். இப்பொழுது எள் பொடி தயாராகிவிட்டது. இந்த எள்ளு பொடியை நாம் அதிக அளவில் செய்து வைத்துக்கொண்டோம் என்றால் நாம் நினைக்கும் போதெல்லாம் எள்ளு சாதம் செய்யலாம். அதோடு மட்டுமல்லாமல் இந்த பொடியை நாம் இட்லி பொடியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகுளுந்தை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் இரண்டு வர மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்க்க வேண்டும் அதில் கடலைப்பருப்பு, வேர் கடலை, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதில் நாம் ஏற்கனவே ஆற வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதற்கு மேல் நாம் அரைத்து வைத்திருக்கும் எள்ளு பொடியையும் போட்டு நன்றாக கிளற வேண்டும். சாதத்திற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். அவ்வளவுதான் எள்ளு சாதம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: சுரைக்காய் குருமா செய்முறை

மிகவும் ஆரோக்கியமான அதே சமயத்தில் எளிதில் செய்து முடிக்கக்கூடிய இந்த எள்ளு சாதத்தை நாமும் வாரத்திற்கு ஒருமுறை செய்து நம் உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வோம்.

- Advertisement -