உங்கள் வாழ்க்கையில் பாதி துன்பம் காணாமல் கரைய சனிக்கிழமைகளில் இதை மட்டும் செய்ய மறக்கவே மறக்காதீங்க!

sani-crow
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துன்பங்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். பணம் இருப்பவர்களிடம் நிம்மதி இருக்காது, நிம்மதி இருப்பவர்களிடம் பணம் இருக்காது. இப்படி ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் மனிதன், சனிக்கிழமைகளில் இதை மட்டும் செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாதி துன்பம் நீங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி நாம் சனிக்கிழமையில் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக சனிக்கிழமை என்பது பெருமாளுக்கும், சனி பகவானுக்கும் உகந்த ஒரு நன்னாளாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதிக்கு சென்று எள் விளக்கு ஏற்றி வழிபடுவதும், பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமைகளில் செய்ய மறக்க கூடாத ஒரு விஷயமும் உண்டு.

- Advertisement -

எந்த ஒரு தோஷத்திற்கும், கிரக பிரச்சனைகளுக்கும், மனப் போராட்டத்திற்கும் செய்யக்கூடியதாக ‘தானம்’ ஒன்றே பலனாக அமைகிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தவறாமல் இந்த ஒரு தானத்தை செய்து வருவதன் மூலம் வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்து போவதாக நம்பிக்கை கூறப்படுகிறது. கருப்பு எள் என்பது சனிபகவானுக்கு உரிய ஒரு பொருளாக இருக்கிறது. இந்த எள்ளை கொண்டு சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது உண்டு. அது மட்டும் அல்லாமல் சாதத்தில் எள்ளை கலந்து காகத்திற்கு வைத்து வழிபடுவதும் விசேஷமானதாக இருந்து வருகிறது. அது போல எள்ளுடன் வெல்லத்தை தட்டி உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை எள் உருண்டை என்று கூறுவார்கள். இந்த எள் உருண்டையை சனிக்கிழமைகளில் தவறாமல் எறும்புகளுக்கு நீங்கள் தானம் செய்ய வேண்டும். எள்ளுருண்டை எறும்புகளுக்கு தானம் செய்யும் பொழுது, அது சிறக சிறுக தன்னுடைய புற்றில் கொண்டு போய் சேர்க்க ஆரம்பிக்கும். இப்படி சேர்க்கப்படும் எள் ஆனது புண்ணியத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இதனால் சிறுக சிறுக நம்முடைய புண்ணியமும் சேருமாம். அது மட்டுமல்லாமல் சனிக்கிழமைகளில் இந்த எள்ளை கொண்டு சமைத்த சாதத்தை காகத்திற்கு வைத்த பிறகு நீங்கள் மதிய உணவை எடுத்துக் கொள்ளலாம். இதனால் பித்ருக்களுடைய ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் சனி தோஷம் நீங்கும், பீடித்திருக்கும் சனியின் தாக்கமும் குறையும் என்று நம்பிக்கை உண்டு. அதுபோலவே எள், வெல்லம் கலந்த இந்த எள் உருண்டையை பசு மாட்டிற்கு தானம் செய்வதும் சிறப்பான பலன்களை கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம், அகத்திக்கீரை மட்டும் அல்லாமல் எள் கலந்த இந்த எள் உருண்டையையும் பிடித்துக் கொடுக்க அதனை பசு சாப்பிட்டு வந்தால், நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் படிப்படியாக நீங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

இதையும் படிக்கலாமே:
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பொருட்களை மட்டும் பார்த்தால் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்புமாம்!

எள்ளை தானம் செய்வது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களை போக்குவதற்கு மட்டும் அல்லாமல், இருக்க வேண்டிய நிம்மதியையும் நமக்கு பெற்று கொடுக்கக்கூடிய அற்புதமான எளிய பலனாக இருந்து வருகிறது. சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி, சனி பகவானை வழிபட்டு, எள் தானம் செய்து வந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும். இது போல எள்ளை கொண்டு நம் செய்யும் ஒவ்வொரு சிறு தானங்களும், நமக்கு மிகப்பெரிய பலன்களை, வரங்களையும் அள்ளிக் கொடுப்பதாக இருக்கிறது.

- Advertisement -