உங்கள் கையால் இந்த 1 பொருளை எடுத்து தலையைச் சுற்றிப் போட்டாலே போதும். உங்களை பிடித்த பீடை விலகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

sad-lemon

நிறைய பேருக்கு இந்த ஆசை இருக்கும். ‘தான் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்கவேண்டும். தன்னுடைய கை, ராசியான கையாக இருக்க வேண்டும். தன்னுடைய முகம் ராசியான முகமாக இருக்க வேண்டும்’. என்று தான். ஆனால் பல பேருக்கு இது அமைவது கிடையாது. சிலபேர் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். சிலபேர் பொண்ணையே தொட்டாலும் அது மண்ணாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லப்படவில்லை. நடைமுறை வாழ்க்கையில் இயற்கையாகவே இது பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தான்.

sad-crying2

சிலரை அதிர்ஷ்டகாரர்கள் என்று சொல்லுவதும், சிலரை துரதிஸ்டகாரர்கள் என்று சொல்லுவதும் நடைமுறை வாழ்க்கையில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. முடிந்த வரை யாரையும் துரஅதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லி ஒதுக்கி வைக்கக் கூடாது. அடுத்தவர்களுடைய மனதை புண்படுத்தினால் அது நமக்கு அதிகப்படியான பாவத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். சரி, துரதிர்ஷ்டசாலிகள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் கூட அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்யலாம், என்பதைப் பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான பரிகார முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நீ தொட்டால் எதுவுமே விளங்காது. தயவு செய்து நல்ல காரியங்களில் நீ கலந்து கொள்ளாதே! என்று ஊர் மக்களால் பேசி ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கூட அதிர்ஷ்டசாலிகள் ஆக மாறலாம், இந்த பரிகாரத்தை செய்தால். முதலில் ஒரு எலுமிச்சம்பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக குங்குமம், கொஞ்சமாக கல்லுப்பு, இந்த மூன்று பொருட்கள் மட்டும் இந்த பரிகாரத்திற்கு போதும்.

lemon

முதலில் எலுமிச்சம்பழத்தை நான்காக நறுக்க வேண்டும். நான்கு துண்டுகளாக உங்கள் கைகளில் வந்து விடக்கூடாது. ஒரு கொத்தாக நறுக்கி, அந்த எலுமிச்சம் பழத்திற்கு உள்ளே குங்குமத்தை தடவி அதன் பின்பு அந்த எலுமிச்சம் பழத்திற்கு உள்ளே கல் உப்பை வைத்து பரிகாரத்திற்கா தயார் செய்து கொள்ளவேண்டும்.

தயார் செய்த இந்த எலுமிச்சம்பழத்தை வலது உள்ளங்கைகளில் வைத்து இருக்க பிடித்துக்கொண்டு, ஒரு 5 நிமிடங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து, உங்களுக்கு இனி வாழ்க்கையில் எல்லாமே நன்மையாக நடக்க வேண்டும். உங்கள் கை, ராசி ஆக மாற வேண்டும் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் ஆக மாற வேண்டும், என்று அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சம்பழத்தை உங்களுடைய தலையை மூன்று முறை மட்டும் சுற்றி, ஒரு காகிதத்தில் வைத்து மடித்து குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

lemon

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமென்றாலும் தொடங்கலாம். ஆனால் தொடர்ந்து 5 நாட்கள் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம். உச்சிப் பொழுதான 12 மணி அளவில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்யாதீர்கள். இப்படி செய்து வந்தால் உங்களை அறியாமலேயே உங்களை பிடித்த பீடை விளங்கிவிடும். அதிர்ஷ்டம் தேடி உங்களிடம் ஓடி வந்து விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.