- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎம தீபம் ஏற்றிப்பாருங்கள். முன்னோர்களின் சாபம் முழுமையாக நீங்கி வாழ்க்கை வளம் பெரும். ஆனால் எம...

எம தீபம் ஏற்றிப்பாருங்கள். முன்னோர்களின் சாபம் முழுமையாக நீங்கி வாழ்க்கை வளம் பெரும். ஆனால் எம தீபம் ஏற்றுகையில் இந்த தவறை செய்தால் கடுமையான தீய பலன்கள் நேரும்.

- Advertisement -

பொதுவாக நாம் அனைவரும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அதே சமயம் ஒருவர் இறந்துவிட்டால், இறந்த 30 வது நாள் அன்று கோயிலிற்கு சென்று மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக பலரும் முன்னோர் வழிபாட்டிற்காக எம தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எம தீபம் ஏற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை முறைப்படி ஏற்றவில்லை என்றால் அதன் விளைவு விபரீதமாக இருக்கும். ஆகையால் நம் முன்னோர்கள் அதை தவிர்த்து வந்தனர். ஆனால் வட இந்தியாவில் இந்த எம தீப வழிபாடு கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்திலும் தற்போது இதை பலர் கடைபிடிக்க துவங்கி உள்ளனர். இந்த எம தீபத்தை எப்படி முறையாக ஏற்றுவது? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? இதை யாரெல்லாம் ஏற்றலாம்? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

deepam2

தீபத்திற்கான அடிப்படை விதிகள்:
பொதுவாக எம தீபத்தை மாலை 6 மணிக்கு மேல் தான் ஏற்றவேண்டும். எமனுக்கு உரிய இந்த தீபத்தை வீட்டிற்குள் ஏற்றவே கூடாது. வீட்டின் நிலை வாசலுக்கும் கேட்டிர்க்கும் உள்ள இடைப்பட்ட இடத்தில் இதை ஏற்றலாம். எம தீபமானது தெற்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும். அதேசமயம் சாதாரண ஒரு அகல் விளக்கை கொண்டு இதை ஏற்றினால் போதுமானது. இந்த தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 1 மணி நேரமாவது இந்த தீபம் எரிய வேண்டும்.

- Advertisement -

எம தீபம் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்க வேண்டும். ஆகையால் கீழே கொஞ்சம் மணலோ அல்லது கல்லோ வைத்து ஏற்றலாம். எம தீபம் ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு சொல்ல கூடாது.

deepam

தீபம் ஏற்றும் முறை:
முதலில் ஒரு சிறிய மேடு போன்ற அமைப்பை உருவாக்கி அதில் அகல் விளக்கை வைத்து, அதை சுற்றி வாசனை மிகுந்த பூக்களை தூவ வேண்டும், பிறகு அதற்க்கு மேல் கோதுமையை தூவ வேண்டும்(கோதுமை மாவை தூவ கூடாது). அதற்க்கு மேல் மஞ்சளை தூவ வேண்டும். பிறகு தீபம் ஏற்றுவோர் விளக்கின் பின்புறம் இருந்து தான் இதை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் சமயத்தில் வீட்டில் உள்ள யாரும் கட்டாயம் விளக்கின் முன்புறமாக இருக்கவே கூடாது. தீபம் ஏற்றுகையில் “ஓம் எம தர்ம ராஜாவே நமக” என்ற மந்திரியாதை கூறி ஏற்றலாம்.

- Advertisement -

யாரெல்லாம் ஏற்றலாம்? யாரெல்லாம் ஏற்றக்கூடாது?
வீட்டில் பெண்கள் இருந்தால் இதை பெண்கள் ஏற்றலாம். பெண்களுக்கு மாதவிடாய் இருக்கும் பட்சத்தில் ஆண்கள் ஏற்றலாம். அதே சமயம் கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் ஏற்றக் கூடாது. கை குழந்தை உள்ள வீடுகளிலும் இதை ஏற்றக்கூடாது.

milagu-deepam

எம தீபம் பயன்கள்:
சிலரது வீட்டில் துர்மரண சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படி துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மாவை சாந்தி அடையச் செய்ய உதவுகிறது எம தீபம். அதோடு நமது முன்னோர்களால் நமக்கு ஏற்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் இதன் மூலம் நிவர்த்தியாகும். அதே போல எமதர்ம ராஜாவின் ஆசியை பெற முடியும். அதன் காரணமாக அந்த வீட்டில் உள்ளவர்களின் ஆயுள் கூடும், தர்ம நெறியில் வாழ வழி பிறக்கும் அதோடு துர் மரண சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழாது. பரணி, மகம், சதையம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யம தீபம் ஏற்றுவதன் மூலம் அதிக பலன்களை பெற முடியும்.

deepam

எந்த நாளில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்:
புரட்டாசி மாதத்தில் மாஹாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் மஹா பரணி என்று அழைக்கப்படுகிறது. இந்த பரணி நட்சத்திரமானது எமதர்ம ராஜாவின் நட்சத்திரமாகும். ஆகையால் இந்த நாளில் எம தீபம் ஏற்றுவது நல்லது. அதே போல தீபாவளிக்கு முந்தைய நாள் அன்றும் எம தீபம் ஏற்றலாம்.

deepam

ஏற்றிய தீபத்தை என்ன செய்வது?
நாம் முன்பே கூறியது போல, எம தீபம் ஏற்றுவதற்கு உபயோகப்படுத்தும் எதையும் வீட்டிற்குள் திரும்ப கொண்டு செல்லக்கூடாது. ஆகையால் அவற்றை அடுத்த நாள் காலை ஆற்றிலோ அல்லது கடலிலோ கலந்துவிட வேண்டும்.

சற்று முன்