என் எதிர்காலம் என் கையில் கவிதை

En ethirkalam kavithai

விரைந்து நடக்கிறேன்
அவமானங்களை சுமந்து
வெற்றியை நோக்கி.
இந்த நொடி எனக்கானதாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் எதிர்காலம்
என் பெயர் சொல்லும்.
அதற்காக விரைந்து நடக்கிறேன்..

Ethirkalam en kayil kavithai

சோகத்தின் உச்சம் தொட்டேன்
சொந்தங்களும் வெறுக்க கண்டேன்
ஆனால் என்னுள் இருக்கும்
தன்னம்பிக்கை என்னும் விதை
விருட்சமாய் மாறி நிற்கிறது..
நாளைய சரித்திரத்தில் எனக்கென்று
ஒரு பக்கம் காத்திருக்கிறது என்பதை
ஏனோ இன்று பலர் மறந்திருக்கிறார்கள்
நிச்சயம் சாதிப்பேன்.
இந்த உலகின் முன் நானும்
ஒரு நாள் நிமிர்ந்து நிற்பேன்..

Ethirkalam en kayil kavithai

இதையும் படிக்கலாமே:
நீங்காத எண் சுவாசம் நீ – காதல் கவிதை

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது சான்றோர் வாக்கு. நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போடுவது நம் எண்ணமே. நமது எண்ணத்தை சுருக்காமல், வானத்தை போல விசாலமாக படரவிட்டால் அது நம்மை வானத்தை தாண்டியும் கூட்டி செல்லும். அத்தகைய வலிமை நமது எண்ணத்திற்கு உண்டு.

ஜெய்தே ஆக வேண்டும் என்று வெறியோடும் திமிரோடும் இருப்பவர்கள் முதலில் தங்கள் குறிக்கோளை தீர்மானித்து அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தடைகள் ஆயிரம் வரும் அதை தகர்த்தெறிந்து முன்னேறுபவன் தான் வெற்றியாளனாக மாறுகிறான். எதிர்காலத்தை நோக்கி இன்றில் இருந்து நாம் சிந்தித்து அதற்கான முயற்சியை துவங்கினால் நாளைய எதிர்காலம் நம் கையில்.